'ஜெட்' வேகத்தில் உயரும் 'பலியானோர்' எண்ணிக்கை... 'திணறும் வல்லரசு நாடுகள்...' 'உலகப் போரை விட மோசமான சூழல்...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Apr 01, 2020 04:15 PM

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

The death toll from the coronavirus virus exceeds 43,000

உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலியாவோரின் எண்ணிக்கை சிலநாட்களுக்கு முன் வரை நூற்றுக்கணக்கில் தான் இருந்தது. ஆனால் தற்போது தினமும் ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று ஒரே நாளில் சுமார் 4,000 பேர் பலியாகினர். இதில், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பலியானவர்கள் மட்டும் பாதிக்கும் மேற்பட்டோர் ஆவர்.

இதன் மூலம் உலக அளவில் கொரோனா வைரசுக்குப் பலியானோர் எண்ணிக்கை தற்போது  43 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி  43,271 பேர்  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பலியாகியுள்ளனர் . அதே போல் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8.72 லட்சத்தைக் கடந்துள்ளது.  ஒரு லட்சத்து 84 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

இத்தாலியில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். கிட்டதட்ட 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 88 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. வைரசின் பிறப்பிடமான சீனாவில், இன்று புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.

Tags : #CORONA #DEATHTOLL #INCREASE #AMERICA #ITALY #SPAIN