‘எது? கொரோனா டெஸ்ட்டா? ஆள வுடுங்கடா சாமி!’.. ‘ஓடும் பேருந்தில் இருந்து எகிறி குதித்து ஓடிய இளம் பெண்’.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Apr 01, 2020 02:08 PM

சீனாவில் கொரோனா பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மாணவி ஒருவர் திடீரென இறங்கி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

woman run out of bus when police brought her for corona test

சீனாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் ஜெர்மனியில் படித்து வந்தார். கடந்த சனிக்கிழமை விமானம் மூலம் நாடு திரும்பிய அவரையும், அவருடன் சேர்ந்த சில பயணிகளையும் போலீஸார் கொரோனா பரிசோதனைக்காக பேருந்தில் அழைத்துச் சென்றுகொண்டிருந்தனர். 

அப்போது காய்ச்சலால் பாதிக்கபட்டிருந்த அந்த மாணவி, ஓடும் பேருந்தில் இருந்து திடீரென தனது பைகளுடன் இறங்கி ஓடினார். அப்போது அதை கவனித்த போலீஸார், அந்த மாணவியின் பின்னால் ஓடி, விரட்டிப் பிடித்து பின்னர் மாணவியை கொரோனா பரிசோதனை முகாமுக்கு கொண்டு வந்தனர். 

 

Tags : #CORONA #CORONAVIRUS #WOMAN