கொரோனோவால் 'ஆடம்பர' ஹோட்டலில்... '20 பெண்களுடன்' தனிமைப்படுத்திக் கொண்ட மன்னர்?
முகப்பு > செய்திகள் > உலகம்உலகெங்கும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவால் மக்கள் பலரும் தங்களை தனிமைப்படுத்தி கொண்டு வருகின்றனர். அதேபோல தாய்லாந்து நாட்டு மன்னரும் 20 பெண்களுடன் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கொரோனா காரணமாக தாய்லாந்து மன்னர் மஹா வஜிரலொங்கோன் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள முடிவு செய்து, அதற்காக ஜெர்மனியில் உள்ள ஆடம்பரமான நட்சத்திர ஹோட்டல் ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கிறாராம்.
இதற்காக தன்னுடைய பணியாளர்கள், 20 பெண்கள் என மிகப்பெரும் பட்டாளத்துடன் அவர் அந்த ஹோட்டலுக்கு சென்றாராம். ஆனால் கடுமையான கெடுபிடிகள் காரணமாக அவர் சுமார் 100-க்கும் அதிகமான தன்னுடைய பணியாளர்களை திருப்பி அனுப்பி விட்டு தற்போது 20 பெண்களுடன் அந்த ஹோட்டலில் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
தாய்லாந்திலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் இதுவரை சுமார் 1,651 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்த மோசமான சூழலில்தான் அந்நாட்டு மன்னர் மஹா வஜிரலொங்கோன் இப்படி நட்சத்திர ஹோட்டலில் தஞ்சமடைந்து இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
தாய்லாந்து மன்னரை விமர்சித்தால் சிறைத்தண்டனை கிடைக்கும் என்பது தெரிந்தும் அந்நாட்டு மக்கள் தொடர்ந்து அவரை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். மேலும் பிறநாட்டு மக்களும் இப்படி ஒரு தனிமைப்படுத்துதலா? என சமூக வலைதளங்களில் வியந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
