'தும்மல்', இருமலின் போது... 'கொரோனா' நீர்த்துளிகள் '27 அடி' வரை 'பயணிக்கும்' ஆனால்... 'புதிய' தகவலுடன் 'எச்சரிக்கும்' விஞ்ஞானிகள்...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Apr 01, 2020 04:00 PM

தும்மல், இருமலின் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

Coronavirus Droplets Could Travel Up To 27 Feet MIT Scientist

தும்மல், இருமலின் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் என எம்ஐடியின் இணை பேராசிரியரும் திரவ இயக்கவியலில் நிபுணருமான லிடியா பவுரவுபியா என்பவர் ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷனில் (ஜமா) வெளியிட்டுள்ள ஆராய்ச்சி கட்டுரையில் கூறியுள்ளார். மேலும் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க  சமூக தூரத்தை ஆறு அடியாக (2 மீட்டர்) திருத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் அதில், "நீங்கள் அணியும் முகமூடியின் செயல்திறன் உயர்-வேக வாயு மேக உமிழ்வைப் பொறுத்தது. அதிகபட்சமாக வெளிவிடும் வேகம் வினாடிக்கு 33 முதல் 100 அடி வரை (10-30 மீ / வி) இருந்தால்  சுமார் 23 முதல் 27 அடி (7-8 மீ) வரை பரவக்கூடிய இடத்தை அது உருவாக்குகிறது" எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் கொரானா காற்றின் மூலம் பரவாது நீர்த்துளிகள் மூலமாகவே பரவும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே எம்ஐடி ஆய்வு உண்மையிலேயே மிகவும் தவறாக வழிநடத்துவதாகவும், மிகவும் வலுவான தும்மல் உள்ளவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்  எனவும் அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் அந்தோனி ஃபாசி கூறியுள்ளார். இந்நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் சுமார் 1 மீட்டர் அல்லது மூன்று அடி தூர இடைவெளியை கடைபிடிக்குமாறு மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #CORONAVIRUS #DROPLETS #27FEET #TRAVEL #MIT #SCIENTIST