'ஹலோ பாஸ் என்னது இது'... 'அணிவகுத்த பைக்குகள்'...ஜாம் ஆன 'சென்னையின் பிரபல மேம்பாலம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், சென்னை பாடி மேம்பாலத்தில் அதிகமானோர் இருசக்கர வாகனத்தில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் வெளியில் வரலாம் என்று அரசு அறிவித்துள்ளது. மற்ற நேரங்களில் பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியில் வாகனங்களில் சுற்றக்கூடாது என்றும் அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போலீசார் ரோந்து பணியிலும், சோதனை சாவடிகள் அமைத்தும் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி வருகிறார்கள்.
சென்னையில் தேவையில்லாமல் வெளியில் வருவோருக்கு காவல்துறையினர் அறிவுரை வழங்கி அனுப்பி வைக்கிறார்கள். இந்நிலையில் இன்று காலையில் பாடி மேம்பாலத்தில் திடீரென போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான இருசக்கர வாகன ஓட்டிகள் வரிசையில் நின்றார்கள். இதையடுத்து அந்த பகுதியில் இருந்த காவல்துறையினர், வாகன ஓட்டிகளின் அடையாள அட்டையினை சோதனை செய்து அவசர தேவைகளுக்காக செல்பவர்களை மட்டும் அனுப்பி வைத்தார்கள்.
இதற்கிடையே பொதுமக்கள் தங்களின் பொறுப்புணர்வை புரிந்து செயல்பட வேண்டும், தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளார்கள்.
Despite the lockdown, there is traffic jam at Padi flyover in Chennai 🤦🏼♀️ pic.twitter.com/40ScGs189i
— Shilpa Nair (@NairShilpa1308) April 1, 2020