எதே... 60 வருஷமா தூங்கலையா?... 80 வயசு தாத்தாவின் விநோத சிக்கல்.. இது எப்படிங்க சாத்தியம்?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Feb 13, 2023 10:54 AM

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கடந்த 60 வருடங்களாக தூங்குவதே இல்லை என வெளியான தகவல் பலரது உறக்கத்தையும் பாதித்திருக்கிறது.

The 80 YO Vietnam Man reportedly have not sleep for 60 years

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | துருக்கி பூகம்பம்.. இடிபாடுகளில் சிக்கிய இளைஞர்.. உயிரை காப்பாத்திய வாட்சப் ஸ்டேட்டஸ்..!  

பொதுவாக நாம் மருத்துவரிடம் உடல் நல பரிசோதனைக்காக செல்லும்போது அவர் நம்மிடம் சொல்லும் முக்கியமான விஷயம் சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள் என்பதாகத்தான் இருக்கும். அந்த அளவிற்கு உடல் அளவிலும் மன அளவிலும் தூக்கம் மனிதருக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தூக்கமின்மை பல்வேறு உளவியல் சிக்கல்களுக்கும் காரணமாக அமைந்துவிடும் என தொடர்ந்து மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். ஆனால் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த முதியவர் ஒருவர் இயற்கையின் இந்த கட்டுப்பாடுகளுக்கு விதிவிலக்காக திகழ்கிறார்.

The 80 YO Vietnam Man reportedly have not sleep for 60 years

Images are subject to © copyright to their respective owners.

வியட்நாம் நாட்டை சேர்ந்தவர் தாய் என்கோக் (Thai Ngoc). அங்குள்ள மலைப் பகுதியில் குடும்பத்தினருடன் விவசாய பணிகளில் தாய் ஈடுபட்டு வருகிறார். தினந்தோறும் பல கிலோ மீட்டர்கள் மலைப் பகுதியில் சாதாரணமாக நடந்து சென்று பணிகளை மேற்கொள்ளும் தாய் கடந்த 1973 ஆம் ஆண்டுக்குப் பிறகு தூங்கவே இல்லை என அவரது மனைவி சொல்கிறார். இப்போது மட்டுமல்ல கடந்த சில ஆண்டுகளாகவே வியட்நாம் ஊடகங்களில் தாய் பிரபலமாக பேசப்பட்டு வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரை ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் பேட்டி எடுக்கவும் சென்றதாக தெரிகிறது. அப்போது அவருடைய முழு நாள் வேலையையும் படக் குழுவினர் கண்காணித்திருக்கின்றனர். இது தொடர்பான செய்திகள் அவ்வப்போது வியட்நாம் ஊடகங்களில் வெளிவருவதுண்டு. இருப்பினும் இந்த வயதான நபருடைய சிக்கலுக்கு என்னதான் காரணம்? என்பதற்கு இன்று வரை பதில் கிடைக்காமல் அவரது குடும்பத்தினர் திணறி வருகின்றனர்.

The 80 YO Vietnam Man reportedly have not sleep for 60 years

Images are subject to © copyright to their respective owners.

ஏற்கனவே பலமுறை அவருக்கு உடல் பரிசோதனைகள் நடத்தப்பட்டதாகவும் அப்போது அவர் பரிபூரண நலத்துடன் இருப்பதாகவே மருத்துவர்கள் தெரிவித்திருந்ததாகவும் சொல்கிறார் அவருடைய மனைவி. தினந்தோறும் மலைப் பகுதியில் கடுமையான வேலைகளை செய்த போதிலும் தாய்க்கு தூக்கமும் வருவதில்லை என சொல்லப்படுகிறது. தாய்க்கு இதுவரையில் வேறு எந்த உடல் சிக்கலும் வரவில்லை என அவருடைய மனைவி கூறியுள்ளார். ஆனால் கடந்த 1962 இல் அவருக்கு ஒரு வித காய்ச்சல் ஏற்பட்டதாகவும் ஒருவேளை அதன் காரணமாக இந்த  ஏற்பட்டிருக்கலாம் எனவும் தான் சந்தேகிப்பதாக கூறுகிறார் அவர். ஆனால் முதியவர் தாயின் இந்த சூழ்நிலைக்கான உண்மையான காரணம் இந்த நேரம் வரையில் மர்மமாகவே இருந்து வருகிறது. இது தொடர்பான வீடியோக்கள் மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாக துவங்கி உள்ளன.

Also Read | "இன்டர்நேஷனல் மேட்ச்ல கூட இப்டி நடந்ததில்ல போலயே".. சச்சினையே மிரள வெச்ச ஃபீல்டர்.. வைரல் வீடியோ!!

Tags : #VIETNAM MAN #SLEEP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. The 80 YO Vietnam Man reportedly have not sleep for 60 years | World News.