"DAILY நீங்க OFFICE'லயே தூங்கலாம்.." சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம்.. "சீக்கிரம் அந்த ADDRESS'அ குடுங்கப்பா.."
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா தொற்றிக்கு பிறகான காலகட்டத்தில் அலுவலக சூழ்நிலை என்பது முற்றிலும் மாறுபட்டு, ஒரு புது விதமான உணர்வைத் தான் பலருக்கும் தருகிறது.

(Represent Image)
அதாவது, நீண்ட நாட்கள் வீட்டில் இருந்த படி வேலை செய்து விட்டு, சில ஆண்டுகளுக்கு பிறகு அலுவலகம் சென்ற போது, ஏதோ வித்தியாசமாக உணர்வதாகவே பலரும் கூறுகின்றனர்.
மீண்டும் தங்களின் ஊழியர்களை பழைய நிலைக்கு கொண்டு வர, பல நிறுவனங்கள் அதிரடி நடவடிக்கை பிறப்பித்து, ஊழியர்களை வேலை வாங்கி வருகிறது.
நிறுவனங்களின் அதிரடி நடவடிக்கை
உதாரணத்திற்கு, சமீபத்தில் கூட ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த முதலாளி, வேலை நேரத்தில் உணவருந்த கூடாது என்றும், அப்படி உணவருந்த செல்பவர்களை கண்காணித்து சொல்பவர்களுக்கு சன்மானம் கொடுப்பதாகவும் கூறி எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதிக முறை உணவருந்த சென்று சிக்கிக் கொண்டால், வேலையை விட்டு நீக்க நேரிடும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தது.
இது அல்லவோ அறிவிப்பு..
வீட்டில் இருந்தபடி வேலை செய்து வந்தவர்கள், நிச்சயம் இது போன்ற அறிவிப்பினால், தங்களின் வேலை போய் விடக் கூடாது என ஒவ்வொரு நிமிடமும் தீயாய் உழைக்கத் தொடங்குவார்கள். ஆனால், இப்படி கண்டிப்பான நடவடிக்கை என எதுவும் இல்லாமல், முற்றிலும் மாறுபட்ட, ஊழியர்களுக்கு மிகவும் பிடித்தமான வகையில் ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது பெங்களூரைச் சேர்ந்த நிறுவனம்.
அரை மணி நேர தூக்கம்
'Wakefit' என்ற அந்த நிறுவனம், தங்களின் ஊழியர்கள் அனைவருக்கும், "Announcing Your Right to Nap" என குறிப்பிட்டு, மெயில் ஒன்றை அனுப்பி உள்ளது. இந்த மெயிலில், ஊழியர்கள் அனைவரும் மதியம் உணவருந்திய பின்னர், 2 முதல் 2:30 வரை, 30 நிமிடங்கள் வேலை நேரத்தில் தூங்கிக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
உங்கள ஸ்பீடு பண்ணும்..
மேலும், 26 நிமிட தூக்கம் 33 சதவீதம் செயல்திறனை அதிகரிக்கும் என நாசா ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது என்றும், மதிய நேரத்தில் சிறிது நேரம் தூங்குவது, நினைவுத் திறன், கவனம் செலுத்துவது, படைப்பாற்றல் உள்ளிட்டவற்றுள் உதவி புரியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் அறிவிப்பு தொடர்பான பதிவுகள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட பலரும், இந்த கம்பெனியில் வேலை கிடைக்குமா என்றும், தங்களின் ஆஃபிஸிலும் இது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
