உடைந்து கிடந்த வீட்டின் கதவு.. பதறி போன உரிமையாளர்.. "என்னடான்னு போய் பாத்தா.. உள்ள இருந்து குறட்டை சத்தம் வந்துருக்கு.."
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்த நிலையில், உள்ளே சென்று பார்த்த உரிமையாளருக்கு பெரிய ட்விஸ்ட் ஒன்று காத்திருந்தது.

Also Read | இந்தியாவுலயே இப்படி ஒரு கோவிலை யாரும் கட்டுனதில்ல.. நாட்டையே திரும்பிப் பார்க்க வச்ச ஓய்வுபெற்ற ஆசிரியர்..!
மதுரை அவனியாபுரம் செல்லும் சாலை அருகே அமைந்துள்ள பராசக்தி நகரை சேர்ந்தவர் ரத்தினவேல். மரக்கடை ஒன்றில் இவர் வேலை செய்து வருவதாக கூறப்படும் நிலையில், தனது மனைவி மற்றும் மகளுடன் அவர் வெளியூர் சென்றிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, நேற்று நள்ளிரவு ரத்தினவேல் தனது வீட்டிற்கு மீண்டும் திரும்பி உள்ள நிலையில், அவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி
தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்த நிலையில், பதற்றத்துடன் வீட்டிற்குள் நுழைந்துள்ளார் ரத்தினவேல். தொடர்ந்து, வீட்டிற்குள் சென்று பார்த்த போது, மர்ம நபர் ஒருவர் அறைக்குள் தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர் திருடன் போல இருந்ததால், அவரை வீட்டின் உள்ளே வைத்து பூட்டிய ரத்தினவேல், உடனடியாக அவனியாபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரத்தினவேல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த திருடனை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது, அந்த நபர் மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பது தெரிய வந்தது.
திருடிய வீட்டிலேயே தூக்கம்
மேலும், ரத்தினவேல் வீட்டிற்கு திருட வந்த அந்த நடராஜன், பீரோவைத் திறந்து நகைகளைத் திருடி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. தொடர்ந்து, மது போதையில் இருந்த அவர், அசந்து தூங்கவே, உரிமையாளர் ரத்தினவேல் வந்து பார்க்கும் போது சிக்கி, போலீசாரிடம் வசமாக மாட்டிக் கொண்டார். மேலும், அவரிடம் இருந்த நகையையும் ரத்தினவேலிடம் போலீசார் மீட்டுக் கொடுத்தனர்.
ரத்தினவேல் வீட்டில் திருட சென்றது தொடர்பாக, போலீசார் அந்த இளைஞரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருட போன வீட்டில், அசந்து தூங்கிய திருடன் தொடர்பான செய்திகள், தற்போது மக்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
