'லேசா கண்ணசந்தது குத்தமா?'.. 'இதுக்குத்தான் கோடிக் கணக்குல சம்பளமா?'.. வறுத்தெடுக்கும் ட்விட்டர்வாசிகள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Oct 22, 2019 05:21 PM

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மைதானத்தில் தூங்கிவிட்டதால், இணையவாசிகள் ட்விட்டரில் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

ravi shastri trolled by twitter users after he slept

57 வயதான ரவி சாஸ்திரி நேற்று ராஞ்சியில் நடந்த இந்தியா தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின்போது காலரியில் இருந்தபடி தூங்கியுள்ளார்.  இதற்கு முன்னதாகவும் இதுபோன்று அயர்ச்சி காரணமாக ரவி சாஸ்திரி மைதானத்தின் இருக்கையில் இருந்தபடி மெலிதாக கண்ணயர்ந்த தருணங்களும் இருக்கின்றன.

இம்முறையும் அப்படித்தான் ரவி சாஸ்திரி மெதுவாக கண் சொக்கியிருக்கிறார். அந்த கொஞ்ச கேப் போதும் ட்ரோல் செய்பவர்களுக்கு. உடனே இப்படி தூங்குவதற்குத்தான் கோடி கோடியாய் சம்பளம் கிடைக்கிறது போல? என தொடங்கி ஏகத்துக்கும் கமெண்ட்ஸ்களை பறக்க விட்டுக்கொண்டிருக்கின்றனர். அவர் கண்ணயர்ந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags : #CRICKET #RAVI SHASTRI #SLEEP #INDVSA