"இன்டர்நேஷனல் மேட்ச்ல கூட இப்டி நடந்ததில்ல போலயே".. சச்சினையே மிரள வெச்ச ஃபீல்டர்.. வைரல் வீடியோ!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு என்பதைத் தாண்டி மிகப்பெரிய ஒரு உணர்வாகவும் பலரது மத்தியில் உள்ளது. சர்வதேச போட்டிகள் தொடங்கி உள்ளூரில் சிறு சிறு கிராமங்கள் வரை பல்வேறு இடங்களில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதை பலரும் ரசித்து கவனிக்கவும் செய்வார்கள்.
Images are subject to © copyright to their respective owners
அப்படி இருக்கையில் இந்த கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக ஏராளமான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வைரல் ஆவதையும் நாம் கவனத்திருப்போம். பொதுவாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் நாம் சர்வதேச போட்டிகளில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஒரு சம்பவம் நடைபெறும் போது, அது தொடர்பான வீடியோக்கள் உலக அளவில் கிரிக்கெட் ரசிகர் மத்தியில் கவனம் பெறவும் செய்யும்.
அந்த வகையில் ஒரு சம்பவம் குறித்த வீடியோ தான் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வரை இதற்கு ரியாக்ட் செய்துள்ளார்.
இது தொடர்பாக வைரலாகி வரும் வீடியோவின் வட இந்தியாவில் ஏதோ ஒரு பகுதியில் உள்ளூரில் நடந்த கிரிக்கெட் போட்டி என்பது தெரிகிறது. சுற்றி ஏராளமான ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே நின்றபடி கிரிக்கெட் போட்டியை ரசித்துக் கொண்டிருக்க பேட்ஸ்மேன் அடித்த பந்து நேராக பவுண்டரி லைன் அருகே சென்றது. அப்போது அங்கே நின்ற ஃபீல்டர் பந்தை பிடித்த நிலையில், அவர் பேலன்ஸ் இல்லாமல் நின்றதால் லைனுக்கு அந்தப் பக்கம் செல்லும் சூழலும் உருவானது.
Images are subject to © copyright to their respective owners
இதனால் கையில் இருந்த பந்தை தூக்கிப் போட்ட அந்த ஃபீல்டர், பவுண்டரி லைனுக்கு வெளியே நின்றபடி, கால்பந்து போட்டிகளில் "Bicycle Kick" அடிப்பது போல, சுற்றி சுழன்று அடித்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. மேலும் அவர் அடித்த பந்து உள்ளே வர அங்கே இருந்த மற்றொரு ஃபீல்டர் அதனை கேட்ச்சாக மாற்றி இருந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் கூட இப்படி ஒரு சம்பவத்தை பார்த்ததில்லை என பலரும் குறிப்பிட்டு வரும் சூழலில் இந்த வீடியோ சச்சின் டெண்டுல்கர் பார்வையிலும் பட்டுள்ளது.
Images are subject to © copyright to their respective owners
இந்த வீடியோவை பகிர்ந்த சச்சின் டெண்டுல்கர், தன்னுடைய கேப்ஷனில், "கால்பந்து விளையாட தெரிந்த ஒருவரை அழைத்து வந்தால் இப்படித்தான் நடக்கும்" என ஜாலியாக குறிப்பிட்டுள்ளார்.
This is what happens when you bring a guy who also knows how to play football!! ⚽️ 🏏 😂 https://t.co/IaDb5EBUOg
— Sachin Tendulkar (@sachin_rt) February 12, 2023