'இப்படியே படுத்து தூங்கிட்டு இருந்தா...' எப்போ 'வாழ்க்கையில' முன்னேறி 'செட்டில்' ஆகுறது...? இந்த கேள்விய இனிமேல் கேட்க முடியாத அளவுக்கு 'அட்டகாசமான' அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாதூங்க முடிந்தால் போதும் லட்சக்கணக்கில் அள்ளும் வாய்ப்பு வழங்கியுள்ளது வேக்ஃபிட் நிறுவனம்.

இந்த கொரோனா காலத்தில் வேலை பார்த்தாலே சம்பளம் தருவதற்கு நிறைய சிரமங்கள் இருக்கும் நிலையில், பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனம் வேக்ஃபிட் (wakefit) என்ற நிறுவனம் படுத்து தூங்குவதற்கே லட்சக்கணக்கில் சம்பளம் வழங்குகிறது.
இந்த இண்டர்ன்ஷிப் திட்டத்திற்கு சென்ற சீசனில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல் இந்த வருடமும் வேக்ஃபிட் (wakefit) நிறுவனம் இதனை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த வருடம் முந்தைய ஆண்டை விட அதிக சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த போட்டியில் வெற்றி பெறுபவருக்கு 10 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
அதோடு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் கூடுதலாக கிடைக்கும் எனவும், வெற்றியாளருக்கு 10 லட்சம் பரிசு மட்டுமல்லாமல் 'India's Sleep Champion' என்ற பட்டமும் கிடைக்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தூங்கும் போட்டியில் இதுவரை சுமார் 60,000 பேர் விண்ணப்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
