"பில் கட்டுற அளவுக்கு என்கிட்ட காசு இல்ல.. நான் பாத்திரம் கழுவுறேன்".. இந்தியாவையே திரும்பி பார்க்க வச்ச கோடீஸ்வரர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் சோகமான பக்கம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Oct 10, 2022 04:38 PM

அண்மையில் மறைந்த பிரபல முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா-வின் சோகமான நாட்கள் குறித்து மனம் திறந்திருக்கிறார் ஹோட்டல் பணியாளர் ஒருவர்.

Rakesh Jhunjhunwala was ready to wash dishes for paying a bill

Also Read | "45 வருஷமா இந்த இடம் மாறவே இல்ல".. சுற்றுலாப்பயணி போட்ட உருக்கமான போஸ்ட்.. பிரதமர் மோடி செஞ்ச கமெண்ட்.. வைரல் ட்வீட்..!

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா

பங்குச் சந்தை எப்போதுமே பல ஆபத்துகளை உள்ளடக்கியது. பங்குகளின் ஏற்ற இறக்கங்கள் எளிதில் கணிக்க முடியாதவை. இதற்கு பின்னால் உள்ளூர், உலக நடப்புகள் என பல காரணங்கள் இருக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள். ஆனால், இதனை துல்லியமாக அறிந்தவர்களில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவும் ஒருவர். பங்குகளின் எதிர்காலத்தை கணித்து, அதனை வாங்கியதன்மூலம் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபரானார் ராகேஷ். இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் கணிசமான பங்குகளை ராகேஷ் வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம்  உடல்நல குறைவால் அவர் மரணமடைந்தார். போர்ப்ஸ் இதழின்படி இவருடைய சொத்து மதிப்பு 5.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

 Rakesh Jhunjhunwala was ready to wash dishes for paying a bill

பிடிச்ச உணவு

ஆரம்ப காலம் முதலே  மும்பையின் மரைன் டிரைவ் பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார் ராகேஷ். தினந்தோறும் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவு, லாபம் குறித்து தனது நண்பர்களுடன் உரையாடுவதை அவர் வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். இந்நிலையில், அவர் வழக்கமாக செல்லும் உணவகத்தின் பணியாளர் ஒருவர் இதுபற்றி மனம் திறந்திருக்கிறார்.

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவிற்கு உணவு பரிமாறி வந்த அந்த ஊழியரான பிரின்ஸ் தங்கம் இதுபற்றி பேசுகையில்," அவருக்கு மிகவும் பிடித்த உணவு மசாலாவுடன் செய்யப்படும் வேகவைத்த முட்டைகள் தான். அவர் வருவதாக தகவல் தெரிந்தாலே அந்த பதார்த்தத்தை செய்ய சொல்லிவிடுவோம். ஒருமுறை வழக்கமாக அருந்தும் பணத்தை விட விலை மலிவான பானத்தை வழங்குமாறு கேட்டார். ஏன்? எனக் கேட்டதற்கு "எப்போதும் பங்குச் சந்தையில் பணம் கிடைத்துக்கொண்டே இருக்காது" என்றார். அன்றைய அலுவலக நாள் மோசமானதாக இருந்திருக்கும் என நாங்கள் நினைத்துக்கொண்டோம். ஒருமுறை அவரிடம் சாப்பிட்டுக்கான பில்-ஐ நீட்டினேன். அவர் பில் கட்டுவதற்கு போதுமான தொகை தன்னிடத்தில் இல்லை எனவும் பாத்திரம் கழுவ தயாராக இருப்பதாகவும் சொன்னார்" என்றார்.

 Rakesh Jhunjhunwala was ready to wash dishes for paying a bill

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஹோட்டல் ஊழியர்களுக்கு கணிசமான தொகையை டிப்சாக வழங்கக்கூடியவர் எனக் கூறிய பிரின்ஸ்,"அவர் கொடுக்கும் டிப்ஸ் தொகை மிகப்பெரியது. ஒருநாள் அவர் தனது பில் கட்டணத்தை செலுத்தாமல் சென்றுவிட்டார். அடுத்தநாள் பில் தொகையை 50 சதவீத கூடுதல் தொகையுடன் கட்டினார்" என்றார்.

Also Read | "நீங்க எந்த வேலைல இருந்தாலும்.. இந்த ஒரு பாடத்தை மட்டும் Life-ல கத்துக்கோங்க".. ஆனந்த் மஹிந்திரா கொடுத்த அட்வைஸ்.. வீடியோ..!

Tags : #RAKESH JHUNJHUNWALA

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rakesh Jhunjhunwala was ready to wash dishes for paying a bill | India News.