கோவில்'ல குடுக்குற பிரசாதம் தான் சாப்பாடு... 75 வருசம்.. சைவ முதலையா வாழ்ந்து மறைந்த பபியா.. " கேரள மக்கள் இரங்கல்.!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Oct 10, 2022 04:30 PM

75 ஆண்டுகளாக கோவிலை சுற்றி வந்த முதலை ஒன்று தற்போது மறைந்த விஷயம், அப்பகுதி மக்களை கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

kerala babiya crocodile live for 75 years around temple passed away

Also Read | கேட்ச் பிடிக்க வந்த பவுலரை தடுத்த மேத்யூ வேட்..?.. கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சை - வீடியோ!!

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம் கும்பளா பகுதியை அடுத்த அனந்தபுரம் அருகே அருள்மிகு அனந்த பத்மநாப சுவாமி கோவில் அமைந்துள்ளது.

குளத்திற்கு நடுவே இந்த கோவில் அமைந்துள்ள நிலையில், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலுக்கு மூல ஸ்தானமாக இது விளங்குவது என்பது ஐதீகமாகவும் பார்க்கப்படுகிறது.

kerala babiya crocodile live for 75 years around temple passed away

இதனிடையே, இந்த கோவிலின் குளத்தில் வாழ்ந்து வந்த முதலை ஒன்று நேற்று இரவு இறந்து போயுள்ளது. பபியா என்ற பெயருடன் பக்தர்களால் அழைக்கப்பட்டு வந்த இந்த முதலை குறித்த தகவல்கள் தான் மிகவும் ஆச்சரியமான ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது.

அனந்த பத்மநாப சுவாமி கோவில் குளத்தில் வாழ்ந்து வந்த பபியா முதலை, இந்த குளத்திற்குள் எப்படி வந்தது, அதற்கு பபியா என பெயரிட்டது யார் என்பது குறித்த விவரங்கள் சரிவர தெரியவில்லை. ஆனால், இந்த முதலையானது அங்கே வரும் பகதர்கள் மத்தியில் தெய்வீக முதலையாக பார்க்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல், அங்கே வருபவர்களும் ஒரு முறையாவது இதனை பார்த்து விட மாட்டோமா என்று கூட ஏங்குவார்களாம்.

kerala babiya crocodile live for 75 years around temple passed away

இதற்கு காரணம், அந்த முதலையிடம் உள்ள சில குணாதிசயங்கள் தான். கோவிலின் குளத்தில் மீன்கள் அதிகம் உள்ள போதும் இந்த முதலை அவற்றை உண்டதே இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், சைவ முதலையாக இது கருதப்படும் நிலையில், கோவிலில் நைவேத்தியம் செய்யப்பட்ட பச்சரிசி சாதத்தை தான் 75 ஆண்டுகளாக உண்டு வந்தது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல, பக்தர்கள் வழங்கும் சைவ உணவுகளையும் இந்த முதலை உண்ணும் என கூறப்படுகிறது.

kerala babiya crocodile live for 75 years around temple passed away

மேலும், இந்த பபியா முதலையானது பக்தர்கள் உள்ளிட்ட யாருக்கும் எந்த தீங்கும் விளைவித்ததே இல்லை என்றும் பக்தர்கள் குறிப்பிடுகின்றனர். அதே போல, ஒருமுறை கோவில் கருவறைக்குள் வந்து பபியா முதலை சாமி தரிசனம் செய்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களும் அதிகம் இணையத்தில் வைரலாகி இருந்தது.

இந்த நிலையில் தான், பபியா முதலை தற்போது உடல்நல குறைவால் இறந்து போயுள்ளது. முதலையின் உடல் கோவில் வளாகத்தில் பகதர்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டிருந்தது. அதே போல, பபியா முதலை மறைந்ததால் கோவில் நடையும் இன்று காலை திறக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது.

Also Read | வீடு வீடா போய் உணவு டெலிவரி செய்யும் பிரபல நிறுவனத்தின் 'CEO'.. "மூணு வருசமா Follow பண்றாராம்"!!.. சிலிர்க்க வைத்த பின்னணி!!

Tags : #KERALA #CROCODILE #TEMPLE #BABIYA CROCODILE #KERALA BABIYA CROCODILE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kerala babiya crocodile live for 75 years around temple passed away | India News.