“உடற்பயிற்சி.. யோகா.. ஆர்கானிக் உணவு மட்டும் போதுமா?” .. ஆரோக்கியமா இருக்கணும்னா “இதுதான்” அவசியம்! - உலகின் அதிரடி ரிப்போர்ட்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாம் நம் உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும், அப்போதுதான் நாம் நீண்ட நாள் ஆரோக்கியமாகவும் ஆயுளோடும் வாழ முடியும் என்று யோசிக்கிறோம். இதற்கென உடற்பயிற்சி, சரியான உணவு, யோகா என எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு நம் உடலை உறுதியாக வைத்துக்கொள்ள முனைகிறோம்.
ஆனால் உண்மையில் பணம் இருந்தால்தான் உடலும் ஆரோக்கியமாக இருப்பதாக ஒரு அதிரடி ஆய்வு ஒன்று கூறுகிறது. ஆம், பணப்பிரச்சனை குறைந்தாலே மன நிம்மதியும் மனிதனின் ஆயுளும் அதிகரிக்கும் என்றும், ஒருவரின் வாழ்க்கைத்தரத்தை நிர்ணயிப்பது பொருளாதாரம் என்பதால், பொருளாதார முன்னேற்றம் நல்ல வாழ்க்கைத் தரத்தையும் மனோபலத்தையும் தருகிறது என்றும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ட்ரான்ஸ் அட்லான்டிக் ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 வருடங்களாக, லண்டன் பல்கலைக்கழகம் சார்பில், சமுதாயம் மற்றும் பொருளாதாரக் காரணங்களின் அடிப்படையில், முதுமையில் ஆரோக்கியம் குறைவதற்கான காரணத்தை ஆய்வு செய்தபோது ஆரோக்கிய வாழ்க்கையில் பொருளாதாரம் பெரும் பங்கு வகிப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி வசதியுள்ளவர்கள் 50 வயதுக்கு பின்னர் சுமார் 31 வருடங்களும், வசதி குறைந்தவர்கள் 50 வயதுக்கு பின்னர் சுமார் 22 வருடங்களும் ஆரோக்கியமாக வாழ்கின்றனர்.
தவிர, இங்கிலாந்தின் ஆபிஸ் ஃபார் நேஷனல் ஸ்டேட்டிஸ்டிக்ஸ் ஆய்வுப்படி, '65 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்களில், பெண்களைவிட ஆண்கள் அதிக வாழ்நாள் நீட்டிப்பு பெறுவதாகவும், தாத்தா- பாட்டிகளை விடவும் இக்கால குழந்தைகள் ஆயுள் குன்றியவர்களாகவே இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.