"ஐ... ரோபோ பேசுது"... பேரு வியோமித்ரா...இஸ்ரோவுக்கு போனா கண்டிப்பா மீட் பண்ணுங்க... தலைவி தான் அடுத்து விண்வெளிக்கு போறாங்க...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Jan 23, 2020 11:25 AM

இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்ல போகும் முதல் ரோபோ இந்த வியோமித்ராதான். தூரத்தில் இருந்து பார்த்தால் ISRO-வில் பணிபுரியும் ஒரு பெண் விஞ்ஞானி என்றுதான் எண்ணத் தோன்றும். வியோமித்ரா, அத்தகைய நேர்த்தியான வடிவமைப்பு.

Vyommitra was the first robot to go into space on ISRO\'s Project

ISRO-வின் கண்டுபிடிப்பான வியோமித்ரா (Vyommitra) ரோபோ, formal உடையணிந்து, ISRO-வின் அடையாள அட்டையுடன், அழகான கண் சிமிட்டலுடன் அமர்ந்துள்ளது. பத்திரிகையாளர் சந்திப்பில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தது 'வியோமித்ரா.

"நான் முதல் மனித உருகொண்ட ரோபோ. என்னால் விண்வெளி ஆராய்ச்சியாளர்களை அடையாளம் காணவும், அவர்களுடன் உரையாடவும், அவர்கள் கேள்விக்குப் பதில் அளிக்கவும் முடியும். ஆராய்ச்சியாளர்கள் செய்யும் வேலைகள், உஷார்படுத்தும் வேலை மற்றும் சக பயணியாகவும் என்னால் இருக்க முடியும்" என்று பேட்டி அளித்துள்ளது.

இந்திய விண்வெளி வீரர்கள் விண்வெளிக்குச் செல்ல வேண்டும் என்ற பிரதமரின் கனவை நனவாக்கும் விதமாக இஸ்ரோ ககன்யான் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்ப உருவாக்கப்பட்ட ரோபோதான் வியோமித்ரா. மனிதர்கள் இல்லாத சோதனை ஓட்டத்தை இந்த வருட டிசம்பரிலும் மற்றும் ஜூன் 2021-லும் நடைமுறைப்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

Tags : #ISRO #VYOMMITRA #GAGANYAAN #SPACE #MODI #ROBOT