’இனி எல்லாம் ஸ்பீடா நடக்கும்’.. 100 ரோபோக்களை வேலைக்கு வைத்த ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம்!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்By Siva Sankar | Mar 21, 2019 02:14 PM
ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவில் 100 ரோபோக்கள் வேலைக்காக இணைக்கப்பட்டுள்ளன.

தற்காலமும், வருங்காலமும் செயற்கை நுண்ணறிவுக்கான காலம் என்பதால் மனித உழைப்பிற்கு மாற்றாக ரோபோக்களை பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் பணிக்கு அமர்த்துகின்றனர்.
ஏற்கனவே மெக்கானிக்கல், ஐடி, மின்னணு புரொடொக்ஷன் நிறுவனங்களில் ஓரிரு வேலையை மட்டும் செய்யும் சிறிய அளவிலான ரோபோக்கள் இருந்தாலும், மனித செயல்பாடுகளுக்கு மாற்றான ரோபோக்களை பெங்களூரில் ப்ளிப்கார்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ரோபோக்கள் பணிக்கிடங்கில் வரும் பொருட்களின் வகைகளையும், எடைகளையும் எண்ணிக்கைகளையும் தனித்தனியாக பிரித்து கன்வேயர் பெல்ட்டில் இருந்து எடுக்கின்றன. பின்னர் ஒரு பின் கோடு நம்பரின் (அடையாள எண்) உதவியுடன் அவற்றை சரியான பேக்கேஜிங் பெட்டிகளுக்கு அனுப்புகின்றன.
இதனால் மணிக்கு 5 ஆயிரம் பேக்கேஜ்களை ரெடி பண்ண முடிவதாகவும், மனிதர்களை விடவும் 10 மடங்கு அதிக வேலைகளை இந்த ரோபோக்கள் செய்வதாகவும் ப்ளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது இன்னும் ரோபோக்களை பணிக்கு அமர்த்தவுள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
