'எனக்கே விபூதி அடிச்சிட்டல'... 'சைலன்ட்டாக டிரம்ப்பின் மகள் செஞ்ச விஷயம்'... 'ஆடிப்போன டிரம்ப்'... 'இத விடவா அசிங்கப்படணும்'?... நெட்டிசன்கள் கேள்வி!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Jun 06, 2020 11:44 AM

உலகம் முழுவதும் கொரோனா கோரத் தாண்டவம் ஆடி வரும் நிலையில், அமெரிக்காவில் கருப்பு இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவர் கொல்லப் பட்ட விவகாரம் பலரது மனசாட்சியை உலுக்கியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தைக் கண்டித்து அமெரிக்காவில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பலரும் தானாக முன்வந்து போராட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

Trump\'s Daughter Tiffany Protests Black Man\'s Killing On Social Media

வளர்த்த நாடான அமெரிக்காவில் கறுப்பினத்தவருக்கு, வெள்ளை இன காவல்துறையால் நடந்த இந்த கொடூரத்தை ஏற்று கொள்ள முடியாது என அமெரிக்க மக்கள் உட்பட பலதரப்பட்ட மக்களும் கொதித்து எழுந்த நிலையில், ஜனாதிபதி டிரம்ப், நேரத்தை வீணடிக்காதீர்கள். போராட்டக்காரர்களை அடக்கி ஒடுக்குங்கள், இந்த போராளிகளை நாய்கள், திருடர்கள் என்று கூறினார்.இது மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில், டிரம்பின் 2-வது மனைவியான மார்லா மேப்பிள்ஸின் மகள் டிப்பனி, தற்போது நடைபெற்று வரும் போராட்டத்திற்குத் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது டிரம்ப்க்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இராணுவத்தைக் கொண்டு வரப் போகிறேன் என டிரம்ப் கூறியுள்ள நிலையில், அவரது மகளே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த நெட்டிசன்கள், இதை விட டிரம்ப்க்கு அசிங்கம் எதுவும் இல்லை எனக் கழுவி ஊற்றி வருகிறார்கள். சமூகவலைத்தளங்களில் ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு ஆதரவாக #blackoutTTuesday # #justiceforgeorgefloyd என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதை ஆதரிப்பதற்காக, பலரும் கருப்பு நிற புகைப்படத்தைப் பலரும் ஷேர் செய்து வருகிறார்கள். அதனை ஷேர் செய்து தனது ஆதரவை  டிப்பனி தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Trump's Daughter Tiffany Protests Black Man's Killing On Social Media | World News.