'பிரபல பாடகரை கொன்று உப்பு தடவி ஃப்ரிட்ஜிக்குள் வைத்த மனைவி...' 'கொலைக்கான காரணம் கேட்டு அதிர்ந்த போலீசார்...' - கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Aug 03, 2020 01:03 PM

ஊரடங்கில் போதைக்கு அடிமையான கணவனை கொன்று ‘உப்பு கண்டம்’ போட்டு வைத்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

pop singer Alexandra Yushko killed and chopped by his wife

ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க்கை சேர்ந்த  பிரபல பாப் இசை பாடகர் அலெக்சாண்டர் யுஷ்கோ (30). இவரது மனைவி மெரினா குகா (25). இந்த தம்பதியினருக்கு இரண்டு வயது மகன் உள்ளார். கடந்த 1990ம் ஆண்டில் உக்ரேனிய நகரமான நிஜினில் பிறந்த அலெக்ஸ்சாண்டர், ‘ராப்பர்’ இசை மூலம் ரஷ்யாவில் லட்சக்கணக்கான ரசிகர்களின் அன்பை பெற்ற புகழ்பெற்ற பாடகர் ஆவார்.

இந்த நிலையில் ஊரடங்கில் தம்பதியர் இருவருக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் ஆவேசமடைந்த மனைவி மெரினா குகா, மது போதையில் இருந்த தன் கணவனை கொலை செய்ய முடிவெடுத்தார். அதன்படி, கூர்மையான கத்தியால் தனது 2 வயது மகன் கண்முன் வைத்து கணவனை குத்திக் கொலை செய்தார். இந்த சம்பவம்  வெளியே தெரியக் கூடாது என்பதற்காக கணவனின் உடலை கசாப்பு கடையில் கறி வெட்டுவது போல் சிறுசிறு துண்டுகளாக வெட்டினார். வீடு முழுவதும் ரத்த கறை பரவிக் கிடந்ததால், அவற்றை சோப்பு நீரை பயன்படுத்தி கழுவி உள்ளார்.

பின்பு, சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட உடல் பாகங்களை, சலவை இயந்திரத்தில் போட்டு கழுவினார். பிறகு உடல் துண்டுகளை  உப்பு தடவி பிளாஸ்டிக் பைகளில் அடைத்து ப்ரிட்ஜில் வைத்தார்.

இவ்வளவு கொடூர கொலையை செய்துவிட்டு, வழக்கம்போல் மெரினா குகா தனது பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். ஆனால், அலெக்ஸ்சாண்டரின் நண்பர்கள், அவரை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் உடனே விரைந்து மெரினா குகாவிடம் விசாரித்தனர். அவர், மழுப்பலாக பதில் கொடுத்தார்.

போலீசாரின் தீவிர விசாரணைக்கு பின், தனது கணவரை கொன்று உடல் பாகங்களை உப்பு கண்டங்களாக போட்டு, குளிர்சாதன பெட்டியில் வைத்திருப்பதாக தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த போலீசார், உடனே துண்டுகளை கைப்பற்றி, தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், போலீசார் மெரினா குகாவை கைது செய்து தீவிரமாக  விசாரித்து வருகின்றனர். பாடகரின் மரணம், ரஷ்யாவில் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பீட்டர்ஸ்பர்க் நகர போலீசார் கூறுகையில், ‘இது நடந்த தினத்தில் அவர் மதுபோதையில் இருந்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிகளவு மது, போதை பொருள் பயன்படுத்தி வந்ததாக அவரது மனைவி மெரினா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதனால், குடும்பத்தில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கணவனை கத்தியால் குத்திக் கொன்றார். இதற்கு கூரிய கத்திகள், சுத்தியல், பிளாஸ்டிக் பக்கெட், இறைச்சியை வெட்டும் பலகை போன்ற ஆயுதங்களைப்  பயன்படுத்தி உள்ளார். கொலை  வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடக்கிறது. கொலைக்கு மெரினாவின்  தாய் அவருக்கு உதவியுள்ளார்.’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : #MURDER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Pop singer Alexandra Yushko killed and chopped by his wife | World News.