VIDEO : "இங்க ஆள் நடமாட்டம் இல்ல"... "அவள போட்டுத்தள்ள இது தான் கரெக்டான 'ஸ்பாட்'"... 'காதலி'யை பிளான் போட்டு 'கொலை' செய்த 'இளைஞர்',,.. கடைசியில் நடந்த 'ட்விஸ்ட்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்தியப்பிரதேச மாநிலம், உஜ்ஜைன் என்னும் பகுதியில், அமைந்துள்ள பாலம் ஒன்றின் கீழிருந்து இளம்பெண் ஒருவரின் உடலை போலீசார் கண்டெடுத்தனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், அந்த பாலத்தின் அருகிலிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அந்த சிசிடிவி காட்சியில், இரவு சுமார் ஒன்றரை மணியளவில், அந்த பெண்ணுடன் இளைஞர் ஒருவர் அப்பாலத்திற்கு அருகில் சுற்றி திரிந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, இருவரும் அந்த பாலத்தின் அருகே உட்கார்ந்துள்ளனர். திடீரென அந்த இளைஞர், அங்கு உட்கார்ந்திருந்த இளம்பெண்ணை தனது இரண்டு கைகளால் தூக்கி பாலத்தின் கீழ் வீசியுள்ளார்.
அதிலிருந்த அடையாளங்களை கொண்டு சச்சின் என்ற சம்மந்தப்பட்ட அந்த இளைஞரை கைது செய்தனர். விசாரணையில், தான் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். சச்சின் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வந்த நிலையில், உயிரிழந்த அந்த பெண்ணுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்துள்ளார். அப்போது, அந்த இளம்பெண்ணுக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருந்ததாக சச்சின் சந்தேகப்பட்டுள்ளார். இதனால், கோபமடைந்த அவர், இளம்பெண்ணை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
தனது காதலியை கொலை செய்ய நேரம் மற்றும் ஆள் அரவம் இல்லாத இடத்தை தேர்வு செய்த அவர், அங்கு சிசிடிவி இருப்பதை அறியாமல் இருந்துள்ளார். இதனால் தான் கொலை செய்தது என்பது யாருக்கும் தெரியாமல் இருக்கும் என நினைத்து இந்த கொடூர செயலில் ஈடுப்பட்டதை அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
