கொரோனாவை 'சிறப்பாக' கையாளுவதில்... உலகிலேயே இவர்தான் 'பெஸ்ட்' தலைவர்... யாருன்னு பாருங்க!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Apr 23, 2020 06:09 PM

உலக அளவில் கொரோனாவை சிறப்பாக கையாளும் தலைவர்கள் யார்? என்கிற பட்டியலை 'மார்னிங் கன்சல்ட்' என்னும் சர்வதேச நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்திருக்கிறார்.

PM Modi ranks top among global leaders in fight against COVID-19

இந்த இக்கட்டான நேரத்தை திறம்பட கையாளும் உலக தலைவர்கள் பட்டியலில் 68 புள்ளிகளுடன் மோடி முதலிடம் பிடித்திருக்கிறார். மோடிக்கு அடுத்தபடியாக 36 புள்ளிகளுடன் மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடோர் 2-வது இடத்திலும், 35 புள்ளிகளுடன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் 3-வது இடத்திலும் உள்ளனர்.

இந்த பட்டியலில் மைனஸ் 3 புள்ளிகளுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் 8-வது இடத்தை பிடித்திருக்கிறார். அதேபோல பிரான்ஸ் அதிபர் மெக்ரானுக்கு மைனஸ் 21 புள்ளிகளுடன் 9-வது இடமும், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேவுக்கு மைனஸ் 33 புள்ளிகளுடன் 10-வது இடமும் இந்த பட்டியலில்  கிடைத்துள்ளது.