“பொழைச்சுட்டோம்”.. விபத்தான விமானத்தின் முன்பு செல்ஃபி .. உலக லெவலில் வைரலான தம்பதி..
முகப்பு > செய்திகள் > உலகம்காலம் காலமாகவே புகைப்படங்கள் 2 விஷயங்களுக்காக இருந்து வருகின்றன. ஒன்று நினைவுகளை நம்முடன் எடுத்துச் செல்வதற்கு புகைப்படங்கள் பெரும் வாய்ப்பாகவும் அரிய கண்டுபிடிப்பாகவும் பார்க்கப்படுகிறது.
இன்னொன்று குறிப்பிட்ட ஒரு தருணத்தை அதன் தன்மை மாறாமல் புகைப்படத்தில் காண முடியும். இதனால் பல வேளைகளில் புரட்சியும் நடந்திருக்கிறது. போரும் நின்றிருக்கிறது. அதன் நவீன வடிவமாக தற்போது செல்ஃபிக்கள் திகழ்கின்றன. புகைப்படங்களை எடுப்பதற்கு யாரும் தேவையில்லை. தாங்களே அந்த நேரத்தை பதிவு செய்து கொள்ள முடியும் என்கிற வாய்ப்பை வழங்கும் செல்ஃபி தற்போதைய காலகட்டத்தில் ட்ரெண்டிங் ஆக இருக்கிறது.
அப்படித்தான் பெருவைச் சேர்ந்த தம்பதி ஒருவர் விமான விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நிலையில் விபத்துக்குள்ளான விமானத்தின் முன்பாக நின்று செல்ஃபி எடுத்து தங்களுடைய இருப்பை பதிவு செய்துள்ள சம்பவம் வைரலாகி வருகிறது. தென் அமெரிக்காவின் லிமா பகுதியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஓடுபாதையில் இருந்து தவறி தீயணைப்பு வண்டியின் மீது மோதியது. இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் கூட துரதிஷ்டவசமாக விமானம். மோதியதால் தீயணைப்பு வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனைத்தொடர்ந்து விமானத்தை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் உபகரணங்கள் கொண்டு பயணிகளை காப்பாற்றி விட்டனர். அப்படி அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் இருந்து உயிர் தப்பியை தம்பதி ஒருவர் விபத்துக்குள்ளாகி இறக்கை முறிந்து தீயணைப்பு புகை மண்டலம் சூழ கிடக்கும் விமானத்தின் முன்பாக நின்று, அதே பதைபதைப்புடன் செல்ஃபி எடுத்து பதிவிட்டு இருக்கின்றனர்.
இதில் வாழ்க்கை தங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கியிருக்கிறதாகவும் கேப்ஷனில் குறிப்பிட்டு இருக்கின்றனர். இதை பார்த்த நொட்டிஷன்கள் நெகழ்ச்சி அடைந்திருக்கின்றனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.