Y S SHARMILA : ஆந்திர முதல்வரின் சகோதரி.. அப்படியே காரோடு தூக்கிய போலீஸார்.! தெலுங்கானாவில் பரபரப்பு .. பின்னணி என்ன?
முகப்பு > செய்திகள் > இந்தியாஹைதராபாத் ஆந்திர முதல்வரின் சகோதரியும் ஒய் எஸ் ஆர் தெலுங்கானா கட்சித் தலைவருமான ஷர்மிளாவை காருடன் காரை கட்டி இழுத்துச் செல்லும் வாகனம் கொண்டு போலீசார் இழுத்துச் சென்றுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Also Read | நடைப்பயிற்சியில் திடீரென மயங்கி விழுந்து மணக்குள விநாயகர் கோயில் யானை மரணம்.. கதறி அழுத பக்தர்கள்!
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்து வந்தவர் அவருடைய சகோதரி ஷர்மிளா ரெட்டி. ஆனால் பின்னாளில் தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா என்கிற கட்சியை தொடங்கிய ஷர்மிளா அங்கு தன்னுடைய கட்சி சார்ந்த செயல்பாடுகளை செய்து வருகிறார். தெலுங்கானாவில் ஹைதராபாத்தில் வசிக்கும் இவர் தம் கட்சி மூலமாக தெலுங்கானாவில் இருக்கும் ஆளுங்கட்சியான ராஷ்டிரிய சமிதி கட்சியையும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான சந்திரசேகர ராவையும் எதிர்த்து வருகிறார்.
முன்னதாக 200 நாட்கள் கொண்ட பாத யாத்திரை நிகழ்வை தெலுங்கானாவில் நடத்தி வந்த சர்மளா ரெட்டியின் கட்சியினர், இந்த நவம்பர் 27ஆம் தேதி வாரங்கல் பகுதிக்கு வந்தடைந்தனர். அங்குள்ள நர்சம்பேட் பகுதியில் நிகழ்ந்த பொதுக்கூட்டத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி எம்எல்ஏ சுதர்சனை கடுமையாக விமர்சித்தும் பேசியிருந்தார் ஷர்மிளா ரெட்டி. இதனால் அங்குள்ள ராஷ்ட்ரிய சமிதி தொண்டர்கள் கொந்தளித்து ஷர்மிளாவையும் அவருடைய ஆதரவாளர்களையும் எதிர்க்கும் விதமாக அவர்களின் வாகனங்களை சேதத்துக்குள்ளாக்கியதாக ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால் அப்பகுதி கலவரம் ஆனதாக தெரிகிறது. எனினும் சேதமடைந்த வாகனங்களுடன் முதல்வர் சந்திரசேகர ராவ் முன்னிலையில் சென்று நின்று நியாயம் கேட்பதாக குறிப்பிட்டு, ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சி தலைவர் ஷர்மிளா, தம் காரை இயக்கியபடி, தன்னுடைய ஆதரவாளர்களுடன் புறப்பட்டு கொண்டிருந்தபோது, காருக்குள் இருந்த நிலையிலேயே அவருடைய காரை போலீசார் காரைக்கட்டி இழுத்துச் செல்லும் வாகனத்தின் உதவியுடன் எடுத்துச் சென்ற காட்சிகள் பரவி வருகின்றனர்.
பின்னர் போலீசார் அங்கிருந்து ஒய்.எஸ்.ஷர்மிளாவை எஸ்.ஆர் நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Also Read | விண்வெளியில் இருந்து பூமியில் விழுந்த முட்டை.. பலரையும் ஆச்சரியமூட்டும் ரிசல்ட்!!..