'இங்கிலாந்து இளவரசுருக்கு ஹோட்டலில் வேலையா?... சர்ச்சையில் சிக்கிய பிரபல உணவகம்'...
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாத்து இளவரசர் ஹாரி-க்கு, வேலை வழங்க விரும்புவதாக பிரபல அமெரிக்க உணவு நிறுவனம் கூறியுள்ளது.

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவர் மனைவி மேகன், இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக சில தினங்களுக்கு முன் அறிவித்தனர். இதையடுத்து, இளவரசர் ஹாரிக்கு வேலை வழங்க, பர்கர் கிங் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட பர்கர் கிங் என்ற உணவகம், தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டுள்ளது.
அந்த பதிவில், "இளவரசர் ஹாரி அரச பதவியை துறக்காமல் வேலை தேடலாம் என்றும், அப்படி வேலை தேடும்பட்சத்தில் அவருக்காக புதிய மகுடம் ஒன்று தயாராக உள்ளது" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பர்கர் கிங்-இன் இந்த பதிவிற்கு, சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவருகின்றன.
Tags : #ENGLAND #PRINCE #HARRY
