'நெருங்கிவிட்ட ரயில்!'.. தணடவாளத்தில் தவறி விழுந்த பெண்.. சக பயணிகள் செய்த சாமர்த்திய காரியம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Oct 18, 2019 10:29 AM

ரயில் சென்றுகொண்டிருக்கும்போது தண்டவாளத்தில், தவறுதலாக விழுந்துவிட்ட பெண் பயணி ஒருவர், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

passenger reused woman who fell down in train track

அர்ஜென்டினாவின் பியுனாஸ் ஏர்ஸ் பகுதி ரயில் நிலையத்திற்கு சென்ற பெண்மணி ஒருவர், அங்கிருந்த பிளாட்ஃபார்மில் நடக்கும்போது, நடை மேடையில் சென்றுகொண்டிருந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென மயக்கமுற்று, நடந்துவந்த பெண்மணி மீது சரிந்து விழுந்துள்ளார்.

இதனையடுத்து அந்த பெண், எடை தாளாமல் கீழே இருந்த ரயில் தண்டவாளத்தி, தவறி விழுந்துவிட்டார். அப்போது பார்த்து அவ்வழியே ரயில்  வந்ததை அடுத்து, சக பயணிகள் அனைவரும் பதற்றமாகியுள்ளனர். இந்த திக் திக் நொடிகளில் ஒரு கணம் இதயமே படபடத்துப் போன அந்த பெண்ணை சக பயணிகள் அனைவரும் கைகளை அசைத்துக் காட்டி கூட்டாக சேர்ந்து ரயிலை நிறுத்தி பத்திரமாக மீட்டனர்.