'பர்கர்,பீட்ஸா,ஸ்வீட்,பிரியாணி'..இதெல்லாம் இனிமே 'நீங்க' சாப்பிடக்கூடாது!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Sep 17, 2019 07:41 PM
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது, பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அஹமது கொட்டாவி விட்டார். இது ஏகத்துக்கும் வைரலாகி கிண்டலடிக்கப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் தோற்றவுடன், அதற்கு முன்தினம் பாகிஸ்தான் வீரர்கள் ஹோட்டல் சென்று பீட்ஸா சாப்பிட்ட வீடியோக்கள் வைரலாகின.
உலகக்கோப்பை அரையிறுதியில் நுழைய முடியாமல் பாகிஸ்தான் வெளியேறியதால், பயிற்சியாளராக இருந்த மிக்கி ஆர்த்தர் நீக்கப்பட்டு புதிய பயிற்சியாளராகவும், தேர்வுக்குழுத் தலைவராகவும் முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டார்.பந்துவீச்சுப்பயிற்சியாளராக வக்கார் யூனுஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் பாகிஸ்தான் வீரர்கள் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என,மிஸ்பா உல் ஹக் உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.இனிமேல் வீரர்கள் பிரியாணி,ஸ்வீட்,எண்ணெயில் பொறித்த உணவுகள் ஆகியவற்றை வீரர்கள் சாப்பிடக்கூடாது என தடை செய்துள்ளாராம்.அதிக தொப்பையுடன் உடற்தகுதி இல்லாமல் வீரர்கள் இருப்பதால் மிஸ்பா இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாகிஸ்தான் பத்திரிகையாளர் சஜ் சதிக் தனது ட்விட்டர் பக்கத்தில், "மிஸ்பா உல் ஹக் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக வந்தபின் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக வீரர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு, அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தேசிய அணிக்கு மட்டுமல்லாமல், உள்ளூர் போட்டிகளிலும் நடைமுறைப்படுத்துப்பட்டுள்ளது வீரர்களுக்கு பிரியாணி, எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள், இனிப்பு வகைகள், அதிககொழுப்பு கொண்ட இறைச்சி போன்றவை வீரர்கள் சாப்பிட தடை செய்யப்பட்டுள்ளது," எனத் தெரிவித்து உள்ளார்.