பேஸ்புக், வாட்ஸ் அப்பில் வரும் புது வசதி.. நம்மல எமோசனலாக்க ரூம் போட்டு யோசிச்சுருங்கப்பா மெட்டா குரூப்!
முகப்பு > செய்திகள் > உலகம்சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், மெசேஞ்சர் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற அனைத்து சமூக வலைதள பக்கங்களிலும் பல்வேறு உருவங்களையும், சொந்த முகப் பாவனையைக் கொண்டு ஸ்டிக்கர் ஆக உருவாக்கி

மற்றவர்களுக்கு அனுப்பும் வசதி ஏற்கனவே உள்ள நிலையில் தற்போது பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா புதிய வகையான ஸ்டிக்கர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், தற்சமயம் அதிக பயனாளர்களைக் கொண்ட செயலியாக இன்ஸ்டாகிராம் உள்ளது. பல முக்கிய பிரமுகர்களை கொண்ட செயலியாகவும் முகநூல் உள்ளது. எனவே, அதன் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக புதிய புதிய அப்டெட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பேஸ்புக், மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் முதலிய செயலிகளில் பல்வேறு ஸ்டிக்கர்களை பயனாளர்கள் பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது ஃபேஸ்புக்கில் தாய் நிறுவனமான மெட்டா 3டி உருவங்களை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் மற்றவர்களுக்கு இந்த 3டி உருவங்களை அனுப்பும் வகையிலும் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் பார்வையிட்டும், தங்களது கருத்துகளை பதிவிட்டும், மேலும் சக நண்பர்களோடு குறுஞ்செய்தி வாயிலாக உரையாடுவதும் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஸ்டோரிஸ் போடுவது, மற்றவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவது என பயனாளர்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைத்தள செயலியாக இன்ஸ்டாகிராம் காணப்படுகிறது. அவற்றில் 3டி அவதார் உருவங்களைக் கொண்டு அனுப்பும் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதியானது அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், விரைவில் மற்ற நாடுகளுக்கும் இந்த 3டி உருவங்களை அனுப்பும் வசதி கொண்டு வரப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்டிக்கர் அனுப்பும் பயனாளர்களுக்கு இந்த 3டி அவதார் உருவங்கள் மேலும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மற்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வசதியானது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் அனுப்பும் வகையில் உருவாக்கியுள்ள மெட்டா நிறுவனம் விரைவில் நாடு முழுவதும் வருமென தெரிவித்துள்ளது.
இனி குறுஞ்செய்தி டைப் செய்து தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு வாயிலாக, இதுபோல் 3டி அவதார் உருவங்கள் எளிதில் மற்றும் அனுப்புபவர்கள் ரியாக்ஷனை எளிதாக மற்றவர்களுக்கு புரிந்து கொள்ளும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டிக்கர் அனுப்புவது பலருக்கும் பிடிக்கும் அந்த வகையில் இந்த 3டி அவதார் உருவத்திற்கும் நல்ல வரவேற்பு இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
‘அம்மா பசிக்குது’.. நூடுல்ஸ் சமைக்க கேரட் எடுத்துச் சென்ற மகள்.. கோவை அருகே சோகம்..!

மற்ற செய்திகள்
