என்ன ஒரு எகத்தாளம்.. எனக்கே ENDCARD போடுறீங்களா.. மியா கலீபா கொடுத்த ‘நச்’ பதிலடி..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Feb 03, 2022 09:44 AM

முன்னாள் ஆபாச பட நடிகை மியா கலீபா குறித்து இணையத்தில் பரவிய வதந்திகளுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

Mia Khalifa reacts to death rumours with hilarious post

இன்றைய நவீன உலகில், பலரும் தங்களுக்குப் பிடிக்காத நடிகர், நடிகைகளை இணையத்தில் டிரோல் செய்யும் கலாச்சாரம் பரவலாக இருந்து வருகிறது. இதில் அதிகமாக பாதிக்கப்படுவது சினிமா பிரபலங்கள்தான். நீண்ட காலமாக பொதுவெளியில் தோன்றாத பிரபலங்களை இறந்துவிட்டதாக சிலர் வதந்திகளை பரப்பி விடுகின்றனர். இதைப் பார்த்த அதிர்ச்சியடைந்த பிரபலத்துக்கு வேண்டப்பட்டவர்கள், அவரை தொடர்பு கொண்டு விசாரிக்கின்றர். அப்போதுதான் இப்படியொரு வதந்தி பரவியது சம்பந்தப்பட்ட பிரபலத்துக்கே தெரிய வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் முன்னாள் ஆபாச பட நடிகை மியா கலீபா குறித்து வதந்தி ஒன்று இணையத்தில் பரவியது. அது மியா கலீபா இறந்து விட்டதாக சிலர் வதந்தியை கிளப்பி விட்டனர். இதை உண்மை என நம்பிய அவரது ரசிகர்கள் பலரும் மியா கலீபா புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு இரங்கல் தெரிவிக்க தொடங்கினர். இது சமூக வலைதளங்களில் தீயாக பரவியது.

இதனால் கடும் கோபமடைந்த மியா கலீபா, ‘நான் இன்னும் இறக்கவில்லை. உயிரோடு இருப்பதாகவே உணர்கிறேன்’ என மீம் ஒன்றை பதிவிட்டு டிரோல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த குழப்பத்துக்கு காரணம், மியா கலீபாவின் முகநூலில் ‘இவருடன் வாழ்ந்த நினைவுகளைப் பகிருங்கள்’ என்று எழுதப்பட்டிருந்தது தான் காரணம் என அவரது ரசிகர்கள் விளக்கியுள்ளனர்.

Mia Khalifa reacts to death rumours with hilarious post

Tags : #MIAKHALIFA

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Mia Khalifa reacts to death rumours with hilarious post | World News.