உலகின் 99% டேட்டா டிராஃபிக்.. கடலுக்கடியில் 300 மெகா கேபிள்கள்.. கூகுள் மெட்டாவிற்கு அமெரிக்கா சப்போர்ட்
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்ஆசியாவுடன் வளர்ந்து வரும் இணையதளப் போக்குவரத்தை கையாள கடலுக்கடியில் கேபிள் சிஸ்டத்தைப் பயன்படுத்த அனுமதி பெறுமாறு கூகுள் மற்றும் ஃபேஸ்புக்கின் நிறுவனமான மெட்டா ஆகியவற்றுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், தற்போதுள்ள 8,000 மைல் பசிபிக் லைட் கேபிள் நெட்வொர்க்கில் டேட்டாவை அனுப்பவும் பெறவும் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க அனுமதி கேட்டிருந்தது
கடலுக்கடியிலான ஃபைபர்-ஆப்டிக் கேபிள் சிஸ்டம் அமெரிக்கா, தைவான், பிலிப்பைன்ஸ் மற்றும் ஹாங்காங்கை இணைக்கிறது. கடலுக்கடியில் உள்ள கேபிள்கள் உலகின் கிட்டத்தட்ட அனைத்து இன்டர்நெட் டேட்டா டிராஃபிக்கையும் கடத்துகின்றன. மெட்டா நிறுவனம் பிலிப்பைன்ஸ் - அமெரிக்கப் பகுதியை பயன்படுத்த அனுமதி கோரியது.
அதே நேரம் தைவான் நாட்டோடு இணைவதற்கு கூகுள் அனுமதி கேட்டுள்ளது. இதனிடையே குறிப்பாக சீனாவின் உளவுத்துறை நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கர்களுடைய டேட்டாக்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை பாதுகாக்க நிறுவனங்கள் உறுதி பூண்டுள்ளன.
சீனாவால் கட்டுப்படுத்தப்படும் ஹாங்காங்கிற்கு நெட்வொர்க் கேபிளைப் பயன்படுத்துவதற்கான முந்தைய முன்மொழிவை கூகுள் மற்றும் மெட்டாவின் திட்டம் கைவிட்டது. ஏனென்றால் 2020-ல் அந்த திட்டத்தைத் தடுக்க பல அமெரிக்க அரசாங்க நிறுவனங்கள் பரிந்துரை செய்தன.
இதனை தொடர்ந்து "மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் முக்கியமான தனிப்பட்ட டேட்டாக்களை எடுக்க நினைக்கும் சீனாவின் தொடர்ச்சியான முயற்சிகள் காரணமாக, கூகுள் மற்றும் மெட்டாவுடன் தேசிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் தேவை"என்று அமெரிக்க நீதித்துறை கூறியுள்ளது. ஆனால் வாஷிங்டனில் இருக்கும் சீன தூதரகம் மற்றும் கூகுள் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தைவான் மற்றும் அமெரிக்காவில் உள்ள அதன் டேட்டா சென்டர்களுக்கு இடையே அதிகரித்து வரும் ட்ராஃபிக்கை கையாள டேட்டா கனெக்ஷன்கள் தேவை என்று கூகுள் கடந்த 2020-ல் கூறியது. இந்த நிலையில் மெட்டா நிறுவன செய்தி தொடர்பாளர் கூறும்போது, கேபிள் சிஸ்டம் அமெரிக்காவிற்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையில் இணைய திறனை அதிகரிக்கிறது.
மக்கள் இணைந்து தொடர்பில் இருக்கவும் தரவுகளை எளிதாக பகிர்ந்துக் கொள்ளவும் உதவுகிறது. கேபிள்கள் பாதுகாப்பானவை மற்றும் மேம்படுத்தப்பட்ட என்கிரிப்ஷன் மூலம் டேட்டாக்கள் பாதுகாக்கப்படுகிறது என்று கூறியுள்ளார். ஒப்பந்தங்களின் படி கூகுள் மற்றும் மெட்டா ஆகிய நிறுவனங்கள் முக்கிய டேட்டாக்களுக்கான ஆபத்து குறித்த வருடாந்திர மதிப்பீடுகளைமேற்கொள்ள வேண்டும்,
அதுமட்டுமல்லாமல், அவை 24 மணி நேரத்திற்குள் கேபிள்களில் டேட்டா டிராஃபிக்கை கட்டுப்படுத்தவோ அல்லது நிறுத்தவோ முடியும் வகையில் இருக்கின்றன. உலகின் 99% டேட்டா டிராஃபிக்கை கொண்டு செல்லும் சுமார் 300 கடல் கேபிள்கள் இணையதளத்தின் முதுகெலும்பாக அமைந்துள்ளன.