6 வருஷ 'லவ்' சார்...! 'எனக்கு 21 வயசு பொண்ணுலாம் தேவையில்ல...' '83 வயது' மூதாட்டியுடன் உயிருக்கு உயிராக காதல்...! - இந்த காலத்துல 'இப்படியும்' ஒரு லவ்வா...?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாகிஸ்தானை சேர்ந்த 28 வயதான ஹபீஸ் முகமது நடீம் என்ற இளைஞருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு 83 வயதான ப்ரோமா என்ற பெண் ஒருவருடன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவருக்கும் இடையே, 55 வயது வித்தியாசம் உள்ள நிலையில் ஒருவரையொருவர் பார்க்காமலேயே கடந்த ஆறு வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் வேறு நாட்டை சேர்ந்தவர்கள் என்பதால், இருவருக்கும் மொழி பிரச்சனை இருந்துள்ளது. எனவே இருவரும் தங்களின் தாய் மொழியை மட்டுமே அறிந்த நிலையில், மொழிபெயர்ப்பு செயலியின் மூலம் இருவரும் தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் முகமது - ப்ரோமா இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். அதன்படி ப்ரோமா விமானம் மூலம் பாகிஸ்தானுக்கு கிளம்பி வந்துள்ளார், அங்கு இருவருக்கும் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் மகிழ்ச்சி பொங்க திருமணம் நடந்தது.
தன் காதலனை மணப்பதற்காக முஸ்லிம் மதத்திற்கு மாறிய ப்ரோமோ தனது பெயரை பாத்திமா என மாற்றிக்கொண்டார். திருமணத்தின் போது பாத்திமா தனது கைகளில் மருதாணியுடன் பாரம்பரியத்துடன் சிவப்பு நிற திருமண ஆடையை அணிந்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், இஸ்லாமிய சட்டப்படி மனைவியாகும் மணப்பெண்ணுக்கு, மணமகன் கட்டயமாக ஒரு கட்டணத்தை பணமாக கொடுக்க வேண்டும், அதை பாத்திமாவுக்கு முகமது கொடுத்தார். முகமது ஐந்து நாட்களுக்கு முன்னர் 18 வயதான உறவுக்கார பெண்ணை திருமணம் செய்யவிருந்தார், ஆனால் அப்பெண்ணை மணக்க முடியாது என கூறிவிட்டு பாத்திமாவை திருமணம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும் போது, என் மனைவியின் கூந்தல் அழகு, முகம் அழகு, கைகள் அழகு, கால்கள் அழகு. எல்லாமே அழகு. நாங்கள் ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக நேசிக்கிறோம். நாங்கள் 24 மணி நேரமும் திருமணத்தைப் பற்றி மட்டும் தான் பேசிக்கொண்டிருந்தோம்.
பாத்திமா தன் கணவரைக் குறித்து கூறுகையில், நான் எனது கணவரை மிகவும் நேசிக்கிறேன். அவரது செயல்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார். இப்படி இந்த காலத்திலும் இவ்வளவு ஆத்மார்த்தமான காதலா? என்று பலர் வியந்து வாழ்த்தியுள்ளனர்.

மற்ற செய்திகள்
