இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக்கை நேரில் சந்தித்த பிரதமர் மோடி.. சுவாரஸ்ய பின்னணி!!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜி 20 நாடுகள் கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோரை நரேந்திர மோடி நேரில் சந்தித்து கலந்துரையாடி உள்ளார். அதிலும் பிரிட்டனின் இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக்கை மோடி முதல் முறையாக சந்தித்து மோடி பேசிய புகைப்படங்களும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

இந்தோனேசியாவின் பாலி தீவில் இன்று ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த மாநாட்டில் முதல் நாள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் அரங்கிற்கு வந்திருந்தனர்.
அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டோரை சந்தித்த இந்திய பிரதமர் மோடி அவர்களுடன் கலந்துரையாடினார்.
மேலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான சந்திப்பில், இருதரப்பு ஒத்துழைப்பை ஆய்வு செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இந்த சந்திப்பின் போது பிராந்தியம் மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் விவாதித்தனர். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு போன்ற எதிர்காலம் சார்ந்த துறைகளில் மேம்படுத்தப்பட்ட இருதரப்பு ஒத்துழைப்பு குறித்தும் இருநாட்டு தலைவர்களும் ஆய்வு செய்துள்ளனர்.
அதே போல இந்தியாவிற்கு கூட்டாண்மையை வலுப்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தொடர்ச்சியான ஆதரவுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்ததாக தெரிகிறது.
பிரிட்டனின் பிரதமரான பிறகு இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக்கையும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டில் தான் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட பலரையும் சந்தித்திருந்தார் பிரதமர் மோடி. அதே போல, பாலியில் வசிக்கும் இந்திய சமூகத்தினருடனும் மோடி கலந்துரையாடி இருந்தார்.

மற்ற செய்திகள்
