"எப்பவும் நாம CSK குடும்பம் தான்".. ஜடேஜாவின் பதிவில் சின்ன தல போட்ட கமெண்ட்.. உருகிப்போன ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Nov 15, 2022 10:05 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்க வைக்கப்பட்டிருக்கும் ரவீந்திர ஜடேஜாவின் இன்ஸ்டாகிராம் போஸ்டில் சுரேஷ் ரெய்னா செய்திருக்கும் கமெண்ட் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

Suresh Raina Comment in Jadeja Post about CSK Announcement

2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே போல, டிசம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று கேரளாவில் வைத்து ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணிகளும் எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ள போகிறார்கள் என்பது குறித்தும், எந்தெந்த வீரர்களை விடுவித்துள்ளார்கள் என்பது குறித்தும் பட்டியலை அதிகாரபூர்வமாக வெளியிட்டு வருகிறது.

Suresh Raina Comment in Jadeja Post about CSK Announcement

அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்கள் மற்றும் விடுவித்த வீரர்கள் குறித்த பட்டியலையும் வெளியிட்டுள்ளது. பிராவோ, ராபின் உத்தப்பா (ஏற்கனவே ஓய்வை அறிவித்து விட்டார்), ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், க்றிஸ் ஜோர்டன், பகத் வர்மா, KM ஆசிப், நாராயண் ஜெகதீசன் ஆகிய 8 வீரர்களை சிஎஸ்கே விடுவித்துள்ளது.

அதே போல, ஜடேஜா தொடர்ந்து சிஎஸ்கே அணியில் நீடிப்பாரா என இணையத்தில் பலரும் பேசிவந்தனர். இந்நிலையில், தற்போது சிஎஸ்கே அணி ஜடேஜாவை அணியில் தக்க வைத்துக் கொண்டது. இது தவிர, தோனி, டெவான்  கான்வே, ருத்துராஜ் கெய்க்வாட், ராயுடு, மொயீன் அலி, தீபக் சாஹர் உள்ளிட்ட பல வீரர்களை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது. சிஎஸ்கேவை தவிர அனைத்து அணிகளும் இது போல தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், மீண்டும் சிஎஸ்கே அணியில் தக்க வைக்கப்பட்ட ஜடேஜா, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பதிவு இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

தோனியை வணங்கி நிற்பது போன்ற தனது புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த ரவீந்திர ஜடேஜா, "எல்லாம் நன்றாக இருக்கிறது 💛" என குறிப்பிட்டு #RESTART என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்துள்ளார். இந்நிலையில், இந்த பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஜடேஜா பகிர்ந்துள்ளார். அதில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கமெண்ட் செய்திருக்கிறார். அதில்,"வாழ்க்கை முழுவதற்கும் CSK தான் குடும்பம்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

Suresh Raina Comment in Jadeja Post about CSK Announcement

இதனிடையே CSK அணி நிர்வாகம் இந்த பதிவில்,"எப்போதும் என்றென்றைக்கும்" என கமெண்ட் செய்திருக்கிறது. இந்த கமெண்ட்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Tags : #CSK #SURESH RAINA #JADEJA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Suresh Raina Comment in Jadeja Post about CSK Announcement | Sports News.