AR RAHMAN : "தாய் மண்ணே வணக்கம்".. பிரதமர் மோடியின் வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்.!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய பிரதமர் நரேந்திர மோடி தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த வந்தே மாதரம் பாடல் வீடியோவை இந்திய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தம்முடைய பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி இந்திய அளவில் கொண்டாடப்பட்ட தீபாவளி திருநாளை வருடாவருடம் ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை போல இந்த வருடமும் கார்கில் சென்று அங்கிருந்து ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார் .பிரதமர் மோடியின் வருகையால் உற்சாகம் அடைந்த ராணுவ வீரர்கள் பிரதமருடன் இணைந்து தங்களுடைய தீபாவளி நாளினை கழித்தனர்.
இதயம் இதயம் துடிக்கின்றதே⁰எங்கும் உன்போல் பாசம் இல்லை⁰ஆதலால் உன் மடி தேடினேன்⁰தாய் மண்ணே வணக்கம் 🌹🌺🤲🏼🙏🇮🇳 Happy Diwali everyone! https://t.co/bi7uTggoHB
— A.R.Rahman (@arrahman) October 24, 2022
அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த வந்தேமாதரம் பாடலை பிரதமருக்காக, ராணுவ வீரர்கள் அங்கு பாடினர். இதனை பிரதமர் நரேந்திர மோடி தம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதை தம்முடைய பக்கத்தில் இசையமைப்பாளரும் இசைப்புயலுமான ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்திருக்கிறார்.
இதுதொடர்பாக தம் பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் ''இதயம் இதயம் துடிக்கின்றதே.. எங்கும் உன்போல் பாசம் இல்லை.. ஆதலால் .. உன் மடி தேடினேன்.. தாய் மண்ணே வணக்கம்'' என வந்தே மாதரம் பாடலின் தமிழ் வரிகளை குறிப்பிட்டு, அந்த வீடியோவை பகிர்ந்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
