"45 வருஷமா இந்த இடம் மாறவே இல்ல".. சுற்றுலாப்பயணி போட்ட உருக்கமான போஸ்ட்.. பிரதமர் மோடி செஞ்ச கமெண்ட்.. வைரல் ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Oct 10, 2022 03:18 PM

சுற்றுலா பயணி ஒருவருடைய பதிவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி போட்ட கமெண்ட் தான் இணைய தளங்களில் பேச்சாக இருக்கிறது.

PM Modi reply to Twitter User about his Visit to Kashmir post

Also Read | Toss போடணும்.. காசு எங்க?.. கிரவுண்டில் நடந்த சுவாரஸ்யம்.. வைரல் வீடியோ..!

சுற்றுலா பயணி

ரஞ்சித் குமார் என்பவர் காஷ்மீருக்கு சென்ற தனது பயண அனுபவம் குறித்து ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார். அதில், 45 ஆண்டுகளுக்கு முன்னதாக மாணவராக இருந்தபோது அப்பகுதிக்கு சென்றதாகவும், தற்போது அங்கு செல்ல வாய்ப்பு கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் அவர். மேலும், இத்தனை ஆண்டுகளில் அந்த இடங்களின் அழகு குறையவில்லை என்றும் சுற்றுலா பயணிகள் தவறவிட கூடாத இடம் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதனுடன், தான் சென்ற இடங்களின் புகைப்படங்களையும் அதில் பகிர்ந்திருந்தார் ரஞ்சித் குமார்.

PM Modi reply to Twitter User about his Visit to Kashmir post

அந்த பதிவில்,"நான் கடந்த மாத இறுதியில் காஷ்மீருக்குச் சென்றேன். 45 ஆண்டுகளுக்குப் பிறகு நான் அங்கே சென்றேன். பைசரன், அரு, கோகர்நாக், அச்சபால், குல்மார்க், ஸ்ரீநகர் போன்ற இடங்கள் இன்னும் அழகாக இருப்பதைக் கண்டேன். தால் ஏரியில் உள்ள அந்த சார் சினாரில் மட்டும் ஒரு பழமையான சினார் மரம் உள்ளது. மக்கள் அரவணைப்புடன் நடந்துகொள்கிறார்கள். அவசியம் செல்ல வேண்டிய இடம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியான கொஞ்ச நேரத்தில் பிரதமர் மோடி இந்த பதிவில் கமெண்ட் செய்திருக்கிறார். அவருடைய கமெண்டில்,"பிரமாதம். 2019 இல் நான் ஸ்ரீநகருக்குச் சென்றதிலிருந்து ஒரு படத்தைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், தால் ஏரியில் தான் இருக்கும் ஒரு பழைய புகைப்படத்தையும் மோடி பகிர்ந்துள்ளார். இந்த ட்வீட் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

PM Modi reply to Twitter User about his Visit to Kashmir post

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், சுற்றுலா துறையை மேம்படுத்தவும், நீடித்த வளர்ச்சியை சாத்தியமாக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை (DIPR) ட்விட்டரில் தெரிவித்துள்ளது. ஜனவரி முதல் 1.62 கோடி சுற்றுலாப் பயணிகள் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு வருகை தந்ததாக DIPR வியாழக்கிழமை அறிவித்தது. இது கடந்த 75 ஆண்டுகளில் வேறு எந்த மாநிலங்களிலும் நிகழாத சாதனை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூஞ்ச், ரஜோரி, ஜம்மு மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கு உள்ளிட்ட ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் சுற்றுலா துறை அதிகபட்ச வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

Also Read | ஏர்போர்ட்ல திரு திரு-ன்னு முழிச்ச பயணி.. அவர் கொண்டுவந்த மிஷின் மேலதான் சந்தேகமே வந்திருக்கு.. பிரிச்சு பார்த்ததும் அதிகாரிகளே அதிர்ந்து போய்ட்டாங்க..!

Tags : #NARENDRAMODI #PM MODI #TWITTER #KASHMIR POST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. PM Modi reply to Twitter User about his Visit to Kashmir post | India News.