ஹிமாச்சல் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட பிரதமர்.! "அந்த மனசுதான் சார்..!".. நெகிழவைத்த வீடியோ.. HIMACHAL PRADESH

முகப்பு > செய்திகள் > இந்தியா

By K Sivasankar | Nov 09, 2022 09:24 PM

பிரதமர் நரேந்திர மோடி ஹிமாச்சல பிரதேச தேர்தல் பிரசாரத்துக்கு சென்றபோது, அங்கு அவச்சரமாக வந்த ஆம்புலன்சுக்கு வழி விடும் வகையில் காரை நிறுத்திய விஷயம் நெகிழ்ச்சி வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.

PM Modi stopped convoy to let an Ambulance pass Himachal Pradesh

ஜெய்ராம் தாகூர் முதல்வராக இருக்கும் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. மேற்படி, டிசம்பர் 8-ஆம் தேதி இந்த வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவிருக்கின்றன. இது தொடர்பில், தலைவர்கள் பிரசாரம் செய்வதற்கான இறுதிக்கட்டம் நடந்து வந்தது. காரணம்,  தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளது. 

Also Read | "அண்ணனா?.. அப்போ முத்தம் கொடுங்க".. ரச்சிதா & மைனாவிடம் வம்பு பண்ணிய ராபர்ட்.. 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி ஆகிய தலைவர்களும், ஆம் ஆத்மி சார்பில் அரவிந்த கெஜ்ரிவாலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் உள்ளிட்டோரும், இவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட மத்திய அமைச்சர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

PM Modi stopped convoy to let an Ambulance pass Himachal Pradesh

இவர்களுடன், பிற மாநில பாஜக முதலமைச்சர்கள் என ஹிமாச்சல பிரதேசம் சென்று பலரும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.  இதன் ஓர் அங்கமாக பாரத பிரதமர் மோடிக்கு ஹிமாச்சல பிரதேசத்தில் வரவேற்பு உற்சாகமாக கொடுக்கப்பட்டது. அதன்படி ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சம்பி மற்றும் சுஜான்பூரில் நடந்த கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பேசுவதற்காக காரில் புறப்பட்டு சென்றபோது, சாலையில் அவரை வரவேற்க தொண்டர்கள் திரண்டு நின்றனர். ஆனால் அப்போது திடீரென ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டது.

PM Modi stopped convoy to let an Ambulance pass Himachal Pradesh

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தனது கான்வோ காரை நிறுத்த சொல்ல, டிரைவர் காரை நிறுத்துகிறார். பின்னர் பிரதமரை தொடர்ந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகளின் வாகனங்களும் நின்றன. அப்போது சாலையை ஆம்புலன்ஸ் வாகனம் எவ்வித தடையும் இடையூறும் இன்றி கடந்து சென்றது.

அதன் பின்னர், மீண்டும் பிரதமர் மோடியின் கார் நகர, பிரசாரத்துக்கு சென்றார். இந்த வீடியோ வெளியான நிலையில் பலரும் பிரதமர் மோடியின் செயல் குறித்து நெகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

 

Tags : #NARENDRAMODI #NARENDA MODI #HIMACHAL PRADESH #PRIME MINISTER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. PM Modi stopped convoy to let an Ambulance pass Himachal Pradesh | India News.