’மனிதத் தன்மையில்லாதவர்களின்’ மிருகத்தின் மீதான செயல்.. கண்கலங்க வைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | May 13, 2019 07:53 PM

ஜம்மு காஷ்மீரில் இருக்கும் கார்கில் பகுதியில் கரடிக்குட்டி மனிதர்களால் தாக்கப்படும் வீடியோ நெஞ்சைப் பிழிய வைத்துள்ளது.

Watch:Inhuman attack over a bear Heart breaking video

முகமது-அ-ஷா என்பவரது ட்விட்டர் கணக்கில் வெளியான இந்த வீடியோவில், பிரவுன் நிற கரடிக்குட்டி ஒன்று மலைமீது ஏறி தத்தித் தாவி வர முயற்சிக்கிறது. ஆனால் மலைமீதுள்ள மனிதர்கள் அந்த கரடியின் மீது கற்களை எறிந்து, காயப்படுத்துகின்றனர்.

அடியினை வாங்கிக்கொண்டு, மலையில் இருந்து தவ்வி இன்னும் கீழே ஓடி, கடைசியில் பரிதாபமாக ஆற்றுக்குள் விழுவது போல் காணாமல் போகிறது அந்தக்கரடி.  இணையத்தில் அனைவரின் கண்களையும் கலங்கச் செய்யும் இந்த வீடியோ அதிகம் பேரால் பகிரப்பட்டு வருவதோடு, இந்த குரூரமான மனிதர்களின் செயல்களுக்கு பலர் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர். 

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த ஜம்மு-காஷ்மீர் மாநில முதலமைச்சர் மெஹபூபா முஃப்தி, கரடியை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களின் செயலை மனிதத்தன்மையற்ற செயல் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : #BEAR #HEARTBREAKING