'அவனோட சிரிச்ச முகம்'... 'நியாபகத்துல இருக்கணும்'.. தந்தையின் நெகிழ வைத்த காரியம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Jun 25, 2019 11:24 AM

தனது மகன் இறந்து போன பாதாள சாக்கடைக்கு, மகனின் புகைப்படத்தைப் பதித்து தந்தை ஒருவர் மூடி போட்டுள்ள சம்பவம், காண்போரை உருக வைத்துள்ளது.

fathers hearbreaking work after his son fell into drainage

தென்னாப்பிரிக்காவில், டேமியன் ஜாண்ட்ஜீஸ் என்பவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக, தனது வீட்டு முன்பாக தனது மகனுட்னன் விளையாடிக் கொண்டிருந்த போது, தனது நண்பர் வந்துவிட்டதால், அவரைக் காண்பதற்காக மகனை மறந்துவிட்டு, மழை தூவிக்கொண்டிருந்த வேளையில் சாலையைக் கடந்து சென்றார்.

ஆனால் சாலையைக் கடந்த, அவரின் பின்னாலேயே ஓடிவந்த மகனது,  ‘அப்பா’ என்கிற குரல் தனது காதில் விழுந்ததும் திரும்பிப் பார்த்துள்ளார். அவர் திரும்பிப் பார்த்த கணத்தில் சாலையில் மூடாமல் வைக்கப்பட்டிருந்த சாக்கடைக் குழிக்குள் அவரது மகன் விழுந்துவிட்டான்.

உடனடியாக தானும் குதித்து மகனைக் காப்பாற்ற முயன்றபோதும் அதற்கு பலனின்றி அவரது மகனும், சிறு பாலகனுமான அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதனால் மனம் வெம்பிய அந்தத் தந்தை, சாலை நடுவே இருந்த அந்த சாக்கடைக் குழிக்கு மூடி போட்டதோடு, அதில் தனது மகன் சிரித்துக்கொண்டே இருப்பதுபோன்ற படத்தையும் பதித்துள்ளார்.

இதனால் தன் மகன் தன்னை சிரித்துக்கொண்டே அழைப்பது போன்று உணருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Tags : #SAD #HEARTBREAKING #FATHER #MINOR BOY