"என் மகள் கூட DATING போணும்ன்னா".. 5 ரூல்ஸ் போட்ட அம்மா.. "அதுலயும் அந்த 2வது பாய்ண்ட் இருக்கே"!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Oct 11, 2022 10:39 PM

இன்றைய காலகட்டத்தில், சமூக வலைத்தளங்கள் பயன்பாடு என்னும் விஷயம் நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்த வண்ணம் தான் உள்ளன.

australia mom sets 5 rules to date her daughter netizens reacts

இந்த உலகின் மூலை முடுக்கில் என்ன சம்பவம் நடந்தாலும் அது தொடர்பான வீடியோக்கள் அல்லது செய்திகள் உடனடியாக இணையத்தில் வைரலாக தொடங்கும்.

அந்த வகையில், தற்போது இணையத்தை கலக்கும் வீடியோ ஒன்று, மக்கள் மத்தியில் அதிகம் கவனத்தை பெற்று வருவதுடன் பலரும் இது தொடர்பான கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த கேட் கிளார்க் என்ற பெண் ஒருவர் டிக் டாக் தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் தன்னுடைய மகளுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆண்களுக்கான ஐந்து நிபந்தனைகள் குறித்து குறிப்பிட்டுள்ளது ஹைலைட்டான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இதன் முதல் நிபந்தனையில், மகள் டேட்டிங் செய்ய தயாராகவே இருக்கிறார் என்றும் அவருக்கும் மற்றவருக்கும் நல்லது நடக்க வேண்டும் என நினைப்பவர் என்றும் தெரிவித்துளளார்.

australia mom sets 5 rules to date her daughter netizens reacts

இதனைத் தொடர்ந்து, இரண்டாவதாக "எனக்கும் எனது மகளுக்கும் ஒரே நாளில் தான் பிறந்த நாள். அப்படி இருக்கையில் எனது மகளின் முன்னாள் காதலர், இரண்டு பேருக்கும் பிறந்த நாளன்று பரிசுகளை வழங்குவார். இதனால் எனக்கும் எனது மகளுக்கும் இந்த விஷயத்தில் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும்" என்று கேட் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது நிபந்தனையில், ஆறு மாதங்களுக்குள் உங்களது டேட்டிங் வாழ்க்கை தீவிரமாக இருக்கும் வரையில், அதை தாண்டிய உறவு ஏதும் இருக்கக் கூடாது என்றும் அந்த ஆறு மாதங்கள் கழித்து தான் தனது மகளின் காதலனை பார்ப்பேன் என்றும் கேட் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு அடுத்தபடியாக நான்காவது விதியில் உங்களுடைய டேட்டிங் எந்த அளவில் இருந்தாலும் கிறிஸ்மஸ் தடைபட்டு விடக்கூடாது என நிபந்தனை வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இப்போது என்ன செய்வதென்ற கேள்வியே என் மகள் என்னிடம் வந்து கேட்க கூடாத வகையில் அவரை பார்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

australia mom sets 5 rules to date her daughter netizens reacts

கடைசி நிபந்தனையாக அவரது மகளை டின்னர் சாப்பிட வெளியே அழைத்துச் செல்லக்கூடாது என்றும் அப்படியே அழைத்துச் சென்றாலும் அவள் சாப்பிட்டதற்கான பில்லை அவரிடம் கட்ட சொல்லக் கூடாது என்றும் கேட் குறிப்பிட்டுள்ளார்.

இதில் ஒரு சில கருத்துக்களை பெரும்பாலானோர் ஏற்றுக் கொண்டாலும், ஒருசில நிபந்தனைகளில் உடன்படாமல் பலரும் பலவிதமான கருத்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர்.

எதுவாக இருந்தாலும் தனது மகளை டேட்டிங் செய்வதற்கான நிபந்தனைகளை தாயே அறிவித்த விஷயம், பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

Tags : #MOTHER #DAUGHTER #DATING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Australia mom sets 5 rules to date her daughter netizens reacts | World News.