கொரோனாவால் ‘கோமாவுக்கு’ போன கர்ப்பிணி.. குணமாகி குழந்தை முகத்தை ‘முதல்முறையா’ பார்த்த தாய்.. உருகவைத்த வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Apr 17, 2020 11:31 AM

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் கோமா நிலைக்கு சென்ற கர்ப்பிணி பெண் தான் பெற்ற குழந்தையை குணமடைந்தபின் முதல்முறையாக பார்த்த தருணம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Mom meets her newborn son 1st time after recovering from COVID19

அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரை அந்நாட்டில் கொரோனா வைரஸால் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர். இதில் கடந்த 24 நேரத்தில் மட்டும் 4 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் லாங் தீவை சேர்ந்த யானிரா சோரியானோ என்ற நிறைமாத கர்ப்பிணி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். இவர் கடந்த 3 வாரங்களுக்கு நியூயார்க் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் யானிரோ கோமா நிலைக்கு சென்றார். இதனால் அவருக்கு கடந்த 2 வாரங்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது பூரண குணமடைந்த அவர் மருத்துவமனையில் இருந்து சக்கர நாற்காலி மூலம் வீடு திரும்பினார். அப்போது தான் பெற்றெடுத்த குழந்தையை முதல்முறையாக பார்த்தபோது கண்ணீர் மல்க கொஞ்சி மகிழ்ந்தார். பின்னர் சுற்றியிருந்த மருத்துவர்கள் கைதட்டி அன்புடன் அவர்களை வழியனுப்பி வைத்தனர்.