‘ரமலான் வாரம் ஸ்டார்ட் ஆகுது.. ஆனா வழக்கமா கொடுக்கும் நோன்பு கஞ்சி’... இஸ்லாமிய அமைப்புகள் எடுத்த முடிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ரமலான் மாதம் அடுத்த வாரம் தொடங்கும் நிலையில் நோன்பு கஞ்சியை பள்ளிவாசல்களில் வழங்குவதில்லை என்று இஸ்லாமிய அமைப்புகள் முடிவு செய்திருக்கின்றன.
கொரோனா நோய்த்தொற்று தீவிரமானதை அடுத்து மக்கள் ஓரிடத்தில் ஒன்றாகக் கூடுவது கட்டுப்படுத்தப்படும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததோடும் கொரோனாவின் தீவிரம் கருதி அந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டும் உள்ளது.
இந்த நிலையில் ரமலான் மாதம் அடுத்த வாரம் தொடங்கும் நிலையில் நோன்பு கஞ்சி பள்ளிவாசல்களில் வழங்குவதில்லை என இஸ்லாமிய முடிவு செய்துள்ளதாகவும், இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தியதாகவும் தெரிகிறது.
ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சண்முகம் பள்ளிவாசல்களுக்கு அரசு சார்பில் அளிக்கப்படும் பச்சரிசி வரும் 19ம் தேதிக்குள் அளிக்கப்பட்டுவிடும் என்றும் கூறியுள்ளார்.