‘இப்படியொரு கிப்ட்டா..!’.. மகன் பிறந்த நாளுக்கு ‘அம்மா’ கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்.. சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போன மகன்..!
முகப்பு > செய்திகள் > உலகம்மகனின் பிறந்த நாளுக்கு அம்மா கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்தும் நம் கையில் இருக்கும் ஸ்மார்ட் போனுக்குள் அடங்கிவிடுகிறது. அதை பயன்படுத்தி ஆன்லைன் ஷாப்பிங் செய்வது உலகில் உள்ள பெரும்பாலானவர்களின் வாடிக்கையாகியுள்ளது. அந்த வகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த இளைஞர் கேன் வில்லியம்ஸ் அடிக்கடி ஆன்லைன் ஷாப்பிங் செய்து வந்துள்ளார். எந்நேரமும் அமேசான், இ-காமர்ஸ் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தில் எதையாவது ஆர்டர் செய்துக்கொண்டே இருந்துள்ளார்.
இதனால் கேன் வில்லியம்ஸின் பிறந்த நாளுக்கு அவரது தாய் நினா ஏவான்ஸ் ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்க நினைத்துள்ளார். அதற்காக அமேசான் பார்சல் போலவே கேக் செய்து மகளுக்கு பிறந்த நாள் பரிசாக கொடுத்துள்ளார். இதைப் பார்த்த கேன் வில்லியம்ஸ் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போயுள்ளார்.
இதை நினா ஏவான்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நினா ஏவான்ஸ் தொழில் ரீதியாக கேக் வடிவமைத்து வருபவர். இது நான்கு லேயர் கொண்ட சாக்லேட் கேக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மகனின் 24-வது பிறந்த நாளன்று தாய் வித்தியாசமான பரிசு கொடுத்து அசத்திய சம்பவம் உலகம் முழுவதும் கவனம் பெற்று வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
