அமேசான்ல 'அத' புக் பண்ணி கொஞ்சம் நேரத்துல வந்த ஒரு மெயில்...! 'பயங்கர அப்செட் ஆன மாணவிக்கு...' - 6 வருஷம் கழித்து கிடைத்த நீதி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅமேசான் நிறுவனம் மீது மோசடி வழக்கு பதிவு செய்த சட்டகல்லூரி மாணவிக்கு 6 வருடங்கள் கழித்து இழப்பிட்டு தொகையை தர நுகர்வோர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொதுவாக கடைக்கு சென்று வாங்குவதை விட ஆன்லைனில் வாங்குவது நேர செலவை மிச்சப்படுத்தும் என்பதால், ஒரு சிலர் ஆன்லைன் மூலமாகவே பொருட்களை வாங்கும் வழக்கத்தை கொண்டுள்ளனர். ஒரு சிலருக்கு இதுவே பல நெருக்கடிகளை உருவாக்கியும் உள்ளது.
அதுபோல கடந்த 2014-ஆம் ஆண்டு, ஒரிசாவை சேர்ந்த சுப்ரியா ரஞ்சன் என்ற சட்டக்கல்லூரி மாணவர் அமேசானில் வெளியிடப்பட்ட 190 ரூபாய்க்கு லேப்டாப் என்ற சலுகையை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கினார், படிப்பு சார்ந்த விஷயங்களுக்கு லேப்டாப் தேவைப்பட்டதால் ரூ.190-க்கு அறிவிக்கப்பட்ட லேப்டாப்பை அவர் ஆர்டர் செய்துள்ளார்.
ஆனால், ஆர்டர் உறுதிப்படுத்தப்பட்ட சில நிமிடங்களில் அதனை அமோசன் ரத்து செய்துவிட்டதாக சுப்ரியாவிற்கு மின்னஞ்சல் வந்துள்ளது. இதன்காரணமாக கஸ்டமர் சர்வீஸ்க்கு போன் செய்து விசாரித்ததில் உரிய பதில் கிடைக்காத பட்சத்தில் தொழில்நுட்ப ரீதியில் கோளாறு காரணமாக விலையில் குழப்பம் ஏற்பட்டு லேப்டாப் ஆர்டர் ரத்து செய்யப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளனர்.
இதனால் மீண்டும் ஒருமுறை சுப்ரியா மற்றொரு லேப்டாபை ஆர்டர் செய்துள்ளார். அதுவும் உரிய நேரத்தில் அவரிடம் கிடைக்காத காரணத்தால் கல்லூரி பாடத்திட்டத்தை சமர்ப்பிக்க காலதாமதமாகி உள்ளது.
இந்த சம்பவத்தால் விரக்தி அடைந்த சுப்ரியா ஒரிசா மாநில நுகர்வோர் ஆணையத்திடம் முறையிட்டுள்ளார். அவரின் நீண்ட நாள் போராட்டத்திற்கு பலனாக, நிதி மோசடி மற்றும் உளவியல் ரீதியான துன்புறுத்தலுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென அமோசன் நிறுவனத்திற்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சட்டகல்லூரி மனைவியான சுப்ரியாவிற்கு இழப்பீட்டு தொகையாக ரூ.40,000 மற்றும் கூடுதலாக வழக்கு செலவு மற்றும் வாடிக்கையாளரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக 5000 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
