'இனி இப்படியும் டெலிவர் பண்ணுவோம்!'.. ‘தெறிக்கவிடும்’ புதுமுயற்சியில் களமிறங்கிய ‘அமேசான்’ ஆன்லைன் வர்த்தக நிறுவனம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅமேசான் நிறுவனம் 767-300 ரக ஜெட் விமானங்கள் 11ஐ வாங்க வெஸ்ட்ஜெட் ஏர்லைன்ஸ் மற்றும் டெல்டா நிறுவனங்களிடம் ஆர்டர் கொடுத்துள்ளது.
இந்த ஆண்டிலேயே, அமேசானுடன் வெஸ்ட்ஜெட் நிறுவனத்திடமிருந்து வாங்கப்படும் 4 விமானங்கள் இணைய உள்ளது. தற்போது மும்முரமாக பயணிகள் விமானங்களை கார்கோ விமானங்களாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதுமட்டுமின்றி அடுத்த ஆண்டே டெல்டா நிறுவனத்திடமிருந்து வாங்கப்படும் 7 விமானங்கள் டெலிவரி செய்யப்படும் என தெரிகிறது. முன்னதாக அந்நிறுவனம் கார்கோ சேவைக்காக விமானங்களை லீசுக்கு எடுத்து பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது சொந்தமாகவே வாங்குகிறது. அமேசான் நிறுவனம் சொந்தமாக 11 விமானங்களை வாங்குவதால், விமானங்களின் எண்ணிக்கை 85 ஆக உயர இருக்கிறது. மேலும் அந்நிறுவனம் என்ன விலைக்கு இந்த விமானங்கள் வாங்கப்பட்டன என்ற தகவலை வெளியிட மறுப்பு தெரிவித்துள்ளது.
அமேசான் குளோபல் ஏர் நிறுவனத்தின் துணைத் தலைவர் சாரா ரோட்ஸ் இது தொடர்பாக பேசுகையில், “தற்போது பொருட்கள் விரைவாக கிடைக்க வேண்டும் வாடிக்கையாளர்கள் என விரும்புகின்றனர், இந்த புதிய விமானங்கள் வாடிக்கையாளர்களுக்கு காலதாமதமாக டெலிவரி செய்வதை தவிர்க்கும் வகையில் தற்போது வாங்கப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தங்களின் இயங்கத்தை சுமூகமாக நகர்த்திச் செல்ல, சொந்த விமானங்கள் மற்றும் வாடகை விமானங்கள் என கலவையாக இருப்பது தங்களுக்கு உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.