'சாவிய கொடுத்துட்டு...' அப்பாவிடம் சொன்ன 'அந்த ஒரு' வார்த்தை...! 'கண்ணீர் விட்டு அழுத அப்பா...' - நெகிழ வைத்த மகன்...!
முகப்பு > செய்திகள் > உலகம்க்ளோசெஸ்டர்ஷைரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் தன் தந்தை கடனில் வாங்கிய வீட்டை மீட்டு கொடுத்து அவரை இன்ப கடலில் மூழ்கடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

க்ளோசெஸ்டர்ஷைரைச் சேர்ந்த 24 வயதான வாலிபர் ஜேமி நைலாண்ட். இவருக்கு டிக்டாக் கணக்கில் 2.3 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பின் தொடர்கிறார்கள். இந்நிலையில் ஜேமி இந்தவார தொடக்கத்தில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமான ஒரு டிக்டாக் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அந்த டிக்டாக் வீடியோவில், ஜேமி தனது தந்தையின் படுக்கையறைக்குள் மெதுவாக நுழைந்து வீட்டின் சாவியை தன் தந்தையிடம் கொடுத்து, 'நான் உங்களின் வீட்டுக் கடனை அடைத்து விட்டேன்' எனக் கூறுகிறார்.
அப்போது ஜேமி நைலாண்ட்டின் தந்தை, தன் மகன் தனக்கு அளித்த இன்ப அதிர்ச்சியில் ரிச்சர்டு கண்ணீரின் வெள்ளத்தில் மூழ்கினார். இந்த சம்பவம் காண்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஜேமி பதிவிட்ட இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி ஜேமியை 'மிகவும் அன்பான மற்றும் மரியாதைக்குரியவர்' என்று புகழ்ந்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
