'விவாகரத்திற்கு பிறகு கிடைத்த பல கோடி'... 'அசந்து போக வைக்கும் அமேசான் தலைவரின் முன்னாள் மனைவியின் சொத்து மதிப்பு'... நன்கொடைக்கு மட்டும் இவ்வளவா!!!
முகப்பு > செய்திகள் > உலகம்அமேசான் தலைவர் ஜெப் பெசோசின் தனது மனைவி மெக்கன்சி ஸ்காட்டை கடந்த ஆண்டு பிரிந்து சென்றார். அப்போது மனைவியைப் பிரியும் நேரத்தில் ஜெப் பெசோசின் அவருக்குப் பல கோடி அளவிலான பணத்தைக் கொடுத்தார். அதே நேரத்தில் அமேசான் நிறுவனத்தில் மெக்கன்சிக்கு உள்ள பங்குகளின் மூலம் அவரது சொத்து மதிப்பு 4 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.

அதேநேரத்தில் உலகின் 18ஆவது பணக்காரராகவும், உலக அளவில் பெண்களில் மூன்றாவது பணக்காரராகவும் விளங்குகிறார். சொத்து மதிப்பு உயர்ந்து வரும் அதேநேரத்தில் அவர் அறக்கட்டளைகளுக்கு நன்கொடை அளிப்பதிலும் வள்ளலாகத் திகழ்கிறார். இதனால் கடந்த ஜூலை மாதத்தில் 12 ஆயிரத்து ஐந்நூறு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியிருந்தார்.
இதற்கிடையே அடுத்த 4 மாதங்களில் மீண்டும் 29 ஆயிரத்து 400 கோடி ரூபாயை 384 தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த தொகையானது கல்வி, ஏழை எளிய மக்களின் மேம்பாடு ஆகியவற்றுக்காக இந்த நிதி செலவிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மெக்கன்சியின் இந்த தாராள மனது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
