'கேக்ல என்னமோ நெளியுது'... 'ஆசை ஆசையாய் வாங்கிய பிறந்த நாள் கேக்'... அதிர்ந்துபோன குடும்பம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆசை ஆசையாய் வாங்கிய பிறந்த நாள் கேக்கில் புழு இருந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடி சத்யா நகரைச் சேர்ந்தவர் சோலையம்மாள். இவர் தனது 7-ம் வகுப்பு படிக்கும் மூத்த மகனின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று காரைக்குடி அம்மன்சன்னதி மணிக்கூண்டு அருகில் உள்ள ஒரு பேக்கரி கடையில் கேக் வாங்கியுள்ளார். மாலையில் வீட்டில் சிறியதாகப் பிறந்த நாள் விழா எடுத்து கேக்கை வெட்டி உறவினர்கள் சிறுவனுக்கு ஊட்டி விட்டனர்.
இந்நிலையில் குணாலின் மாமா காளிதாஸ் கேக்கை வெட்டும் போது உள்ளே புழுக்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். புழுக்கள் இருந்த கேக்கை தின்ற குணாலுக்கு வாந்தி மற்றும் லேசான மயக்கம் ஏற்பட்டது. உடனே சோலையம்மளின் உறவினர்கள் பேக்கரி உரிமையாளரிடம் இது குறித்துக் கேட்டபோது, அவர் சரிவரப் பதில் கூறாமல் அலைக்கழித்துள்ளார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கடைக்காரரிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து சம்பவம் குறித்து அறிந்த போலீசார் அங்கு வந்து பொதுமக்களை சமாதானம் செய்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துக்குமார், கடை மற்று அங்கிருந்த பொருட்களை ஆய்வுசெய்து பரிசோதனைக்கு மாதிரிகளை எடுத்துச்சென்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
