"விஜயபாஸ்கர் வீட்டு பொங்கல் சீர்"!.. பல கோடிகள் செலவு செய்து... சொந்த தொகுதி மக்களுக்கு திடீர் சர்பப்ரைஸ்!.. அப்படி என்ன ஸ்பெஷல்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தன் சொந்த தொகுதியான விராலிமலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தன் தொகுதியில் உள்ள 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் சீர் வழங்கி வருகிறார்.

தமிழக அரசு இதுவரை இல்லாத அளவிற்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ. 2, 500 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி வருகிறது.
வரும் சட்டமன்ற தேர்தலில் விராலிமலை தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடத் திட்டமிட்டுள்ளார்.
அதனால், மக்களின் நன்மதிப்பை பெறும் வகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தன் தொகுதியில் சொந்த செலவில் "ஒளிமயமான வாழ்வு" என்ற பெயரில் கண் சிகிச்சை முகாம்களை நடத்தி வருகிறார்.
பொதுமக்களுக்கு இலவசமாக கண் அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. கண் கண்ணாடிகளை இலவசமாக வழங்கவும் அமைச்சர் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், தமிழக அரசு போலவே தன் தொகுதி மக்களுக்கு தனி பொங்கல் தொகுப்பை சிறப்பு பரிசான விஜயபாஸ்கர் வழங்கி வருகிறார்.
"நம்ம விஜயபாஸ்கர் வீட்டு பொங்கல் சீர்" என்ற பெயரில் விராலிமலை தொகுதியில் உள்ள 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அதில், பித்தளை பொங்கல் பானை, தட்டு, கரண்டி மற்றும் பொங்கல் வைக்க தேவையான அரிசு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. பொங்கல் பானைகள் கும்பகோணத்தில் ஆர்டர் செய்து பெறப்பட்டதாக சொல்லப்படுகிறது.
விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடு வீடாக சென்று அமைச்சரின் பொங்கல் பரிசுகளை வழங்கி வருகின்றனர். இதற்காக, அமைச்சர் விஜயபாஸ்கர் பல கோடி செலவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

மற்ற செய்திகள்
