“அன்பா பாத்துப்பார்னு நம்பி போனேன்.. கழுத்த நெரிச்சு சித்ரவதை செஞ்சு!”... நாட்டிலேயே முதல் முறையாக ‘இப்படி ஒரு வழக்கில்’ கைதான ‘கொடூரன்’!
முகப்பு > செய்திகள் > உலகம்கனடாவில் தங்கள் மகளை காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தேடப்பட்டு வந்த மகள் ஆண் ஒருவருடன் ஜோடியாக நடமாடுவதை போலீசார் கண்டுபிடித்தனர்.
Ashley என்கிற இளம்பெண்ணின் அத்தை மனோரீதியாக சிகிச்சை அளிப்பவர் என்று எண்ணி Michel Bouvier என்பவருக்கு தங்க இடம் கொடுத்துள்ளார். ஆனால் ஒரு நாள் பக்கத்து வீட்டுக்கு செல்வதாக அத்தையிடம் பொய் சொல்லிவிட்டு சென்ற Ashley தெருமுனையில் தனக்காக காத்திருந்த Michel Bouvier-உடன் காரில் ஏறி இருவரும் தப்பிச் சென்று Hinton அருகே, ஒரே வீட்டில் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.
பின்னர் Ashleyவை நம்ப வைப்பதற்காக பாரம்பரிய முறையில் திருமணம் ஒன்றையும் நடத்தினார் Michel Bouvier. 59 வயதான அவர், Ashley-க்கும் தனக்கும் 40 வயது வித்தியாசம் என்பது ஒரு பிரச்சினையே இல்லை என்று கூறி Ashley-வை நம்ப வைத்ததுடன், அதீத அன்பு காட்டுவதுபோல் பாசாங்கு செய்து ஏமாற்றி உடல்ரீதியாக மட்டுமே பயன்படுத்திக் கொண்டதாக தெரிகிறது. அவரது வசீகரமான பேச்சில் மயங்கி ஆழமான காதலில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த Ashleyவுக்கு பின்னர்தான் Michel Bouvier-ன் சுய உருவம் தெரிய தொடங்கியது.
ஆம் தனது ஆசைக்கு இணங்காத போது Michel Bouvier, Ashley-வை அடித்து துன்புறுத்தியுள்ளார். ஒரு படி மேலே போய் நெஞ்சின் மீது ஏறி உட்கார்ந்து கழுத்தை நெரித்து அடித்து ரத்தம் வரவைத்து சித்திரவதை செய்துள்ளார். அதன்பின்னரே Ashleyவுக்கு எல்லா உண்மையும் புரிந்திருக்கிறது. இதனிடையே மகளை காணவில்லை என Ashley-வின் பெற்றோர் போலீசாரிடத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், Hinton அருகே ஜோடியாக சென்ற இவர்களை கண்டுபிடித்த போலீஸார், Ashley-வை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதனை அடுத்து Ashley சொன்ன தகவல்களை கேட்ட போலீசார் ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக மட்டும் Michel Bouvier-ஐ கைது செய்தனர்.
அதுமட்டுமில்லாமல் Bouvier மீது பாலியல் புகார் உட்பட 8 குற்றச்சாட்டுகள் ஏற்கனவே உள்ள நிலையில், பாலியல் ரீதியான தாக்குதல்கள், உடல் ரீதியான தாக்குதல்கள், கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளின் பேரில் அவர் மீது தற்போது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கனடாவில் 2015 ஆம் ஆண்டு சிறுவர் மற்றும் இளம் பெண்கள் கட்டாயத் திருமணத்தை தடுப்பதற்காக இயற்றப்பட்ட சட்ட பிரிவு 293/2-ன் கீழ் கைதாகும் முதல் நபர் Bouvier என்பது குறிப்பிடத்தக்கது.