விராட் கோலி வெச்ச அப்பீல்.. அடுத்த கணமே அவருகிட்ட ஓடி வந்த ஷகிப்.. பரபரப்பு நிமிடங்கள்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்று வரும் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது.
Also Read | "உங்க Gpay நம்பர் தாங்க Sir".. எலான் மஸ்க் Tweet-ல் தமிழ் நடிகர் போட்ட Viral கமெண்ட்..!
சூப்பர் 12 சுற்று நடைபெற்று வரும் நிலையில், இதுவரை எந்த அணிகளும் அரை இறுதிக்கு முன்னேறவில்லை.
இதனிடையே, இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் நேற்று மோதி இருந்த போட்டி, கடைசி பந்து வரை திக் திக் என்று தான் இருந்தது.
முன்னதாக மூன்று போட்டிகள் ஆடி இருந்த இந்திய அணி, இரண்டில் வெற்றி பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, பங்களாதேஷ் அணியை நேற்று (02.11.2022) சந்தித்திருந்தது. இரு அணிகளுக்குமே வெற்றி பெற வேண்டும் என்ற நிலை இருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்திருந்தது.
அதிகபட்சமாக கோலி 64 ரன்களும், ராகுல் 50 ரன்களும் எடுத்திருந்தனர். தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்களை பங்களாதேஷ் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து 16 ஒவர்களில் 151 ரன்கள் என்ற இலக்கும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இதன் பின்னர், கடைசி ஓவரில் 20 ரன்கள் வேண்டும் என்ற சூழலும் உருவாகி இருந்தது. இதனால் பரபரப்பு தொற்றிக் கொள்ள, அந்த ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். முதல் ஐந்து பந்துகளில் 13 ரன்கள் சேர்க்கப்பட, கடைசி பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டது. சிக்ஸ் அடித்தால் டிரா என்ற நிலையில் அந்த பந்தை அற்புதமாக அர்ஷ்தீப் சிங் வீச ஒரு ரன் மட்டுமே சேர்க்கப்பட்டது. இதனால் இந்திய அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் DLS முறைப்படி த்ரில் வெற்றி பெற்றிருந்தது.
இந்திய அணியின் அரை இறுதி வாய்ப்பும் பிரகாசமாக உள்ளதையடுத்து, தங்களின் கடைசி சூப்பர் 12 சுற்று போட்டியில் ஜிம்பாப்வே அணியை சந்திக்க உள்ளது.
இந்த நிலையில், பங்களாதேஷ் மற்றும் இந்தியா அணிகள் மோதி இருந்த போட்டியில் நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 16 ஆவது ஓவரின் கடைசி பந்தை கோலி எதிர்கொண்டார். அந்த பால் மிகவும் உயரத்தில் செல்லவே, நோ பால் குறித்து நடுவரிடம் கோலி முறையிட்டிருந்தார். பின்னர் நோ பாலும் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.
அப்படி ஒரு சூழலில், கோலி அருகே வந்த பங்களாதேஷ் கேப்டன் ஷகிப் அல் ஹசன், கோலியிடம் நேராக வந்து இது தொடர்பாக பேசியதாகவும் தெரிகிறது. சிறிது நேரம் இருவரும் உரையாடிய பின்னர், மீண்டும் அங்கிருந்து ஷகிப் அல் ஹசன் கிளம்பி போனார். நோ பால் குறித்து இருவரும் பேசி இருக்கலாம் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.