Tiruchitrambalam D Logo Top

ஒரே நேரத்துல 9 பொண்ணுங்க கூட கல்யாணம்.. டைம் டேபிள் போட்டு 'காதல்'.. இப்போ மனைவிகளுக்காக வாலிபர் எடுத்த பரபரப்பு முடிவு!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Aug 24, 2022 09:53 PM

மாடலும் அதிக செல்வாக்கும் உடைய ஆர்தர் உர்சோ என்ற வாலிபர், கடந்த 2021 ஆம் ஆண்டில், ஒரே நேரத்தில் 9 பெண்களைத் திருமணம் செய்திருந்த விஷயம், ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் பெற்றிருந்தது.

brazil man who married 9 women in same time building big house

Also Read | காதலி சொன்ன ஒரே வார்த்தை.. ஒரு வருசத்துல 70 கிலோ குறைத்த வாலிபர்.. சில்லறையை சிதற விட்ட நெட்டிசன்கள்!!

ஆர்தர் எடுத்த முடிவு இணையத்தில் அதிகம் வைரலாகி, இது பற்றி பலரும் பல விதமான கருத்துகளையும் தெரிவித்திருந்தனர்.

அவ்வப்போது, ஆர்தர் மற்றும் அவரது மனைவிகள் குறித்து ஏதாவது செய்தி, இணையத்தில் அதிகம் வலம் வந்த படி தான் இருக்கும்.

அப்படி இருக்கையில், ஒன்பது மனைவிகளில் ஒருவர், ஆர்தரை விவாகரத்து செய்து விட்டு சென்று விட்டார். தனது கணவரை வேறு பெண்களுடன் பகிர்ந்து கொள்வதில் தனக்கு விருப்பமில்லை என்பது தான் விவாகரத்து செய்ய முடிவு செய்ததற்கான காரணம் என்றும் அந்த மனைவி தெரிவித்திருந்தார்.

brazil man who married 9 women in same time building big house

இது ஒருபுறம் இருக்க, ஆர்தர் உர்சோவின் திருமணம் அதிகாரபூர்வமாக செல்லுபடியாகாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதற்கு காரணம், தனது மனைவிகளுடன் உர்சோ வாழ்ந்து வரும் பிரேசில் நாட்டில், ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்வது என்பது சட்டத்திற்கு எதிரானது என தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனாலும், தனது 8 மனைவிகளுடன் ஒரே வீட்டில் மிகவும் உற்சாகமாக வாழ்ந்து வருகிறார் உர்சோ.

brazil man who married 9 women in same time building big house

அதே போல, உர்சோவின் வாழ்க்கை முறை காரணமாக, பலரும் அவர் மீது அதிருப்தியிலும், கோபத்திலும் உள்ளனர். அவர் வீடு சுவர்களில் கூட தேவை இல்லாத வார்த்தைகள் மற்றும் வாசகங்களை எழுதி வைத்து விட்டு செல்கின்றனர். இது பற்றி பேசும் ஆர்தர், சுவரில் எழுதப்பட்ட விஷயம் ஏமாற்றமாக இருந்ததாகவும், எங்களுக்கு அமைதி தேவை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தனது 8 மனைவிகளுடன் வசிப்பதற்காக, சுமார் 7500 சதுர அடியில், ஒரு ஆடம்பர அரண்மனை ஒன்றையும் ஆர்தர் உர்சோ கட்டி வரும் தகவல், பலரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தி உள்ளது. இதற்கு 'Mansion of Free Love' என பெயரும் இடப்பட்டுள்ள நிலையில், இதற்கான பணிகளும் தற்போது மும்முரமாக நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

brazil man who married 9 women in same time building big house

ஒரு பக்கம் புதிய வீட்டின் வேலை, மறுபக்கம் உள்ளூர் மக்களின் எதிர்ப்பு என இருந்தாலும், தனது மனைவிகளுடன் அட்டவணை போட்டு நேரத்தை செலவிட்டு வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். இத்தனை மனைவிகளுடன் வாழ்வது கடினமான ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகம் ஆக்டிவாக இருக்கும் ஆர்தர் உர்சோ, அடிக்கடி தனது 8 மனைவிகளுடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

அப்படி தனது வீடு தொடர்பாக சமீபத்தில் அவர் பகிர்ந்திருந்த பதிவு தான் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | மூதாட்டியின் இறுதிச் சடங்கில்.. சிரிச்சுகிட்டே போஸ் கொடுத்த 'குடும்பம்'.. உருவான 'சர்ச்சை'.. தற்போது தெரிய வந்த பின்னணி

Tags : #MAN #MARRIED #WIVES #BRAZIL MAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Brazil man who married 9 women in same time building big house | World News.