இறப்பதற்கு முன் மலை உச்சியில் செல்ஃபி எடுத்த மனைவி.. கைதான கணவர்.. என்ன நடந்தது.? உறைய வைக்கும் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > உலகம்கர்ப்பிணி பெண் ஒருவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், இது தொடர்பாக அவரது கணவர் குறித்து தெரிய வந்த தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Also Read | "ராணி மாதிரி இருக்குற மனைவிய.. மகாராணி மாதிரி பாத்துப்பேன்".. மாற்றுத்திறனாளியின் உருக வைக்கும் காதல் கதை
துருக்கி மாகாணம், முக்லா என்னும் பகுதியில் Butterfly Valley என்ற இடம் உள்ளது. இந்த இடத்திற்கு ஹக்கன் அய்சல் என்ற நபர் தனது மனைவியான செம்ராவை கடந்த 2018 ஆம் ஆண்டு அழைத்து சென்றுள்ளார். செம்ரா 7 மாத கர்ப்பிணியாக அப்போது இருந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
மலை மீது பல அடி தூரம் சென்ற ஹக்கன் மற்றும் செம்ரா ஆகியோர், செல்ஃபி புகைப்படங்களை எடுத்துக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனிடையே, திடீரென மலை உச்சியில் இருந்து கீழே விழுந்த செம்ரா, பரிதாபமாக உயிரிழந்து போனார். இதனைத் தொடர்ந்து, தனது மனைவி செம்ரா பெயரில் இருந்த 25,000 டாலர் மதிப்பிலான லைஃப் இன்சூரன்ஸ் தொகையை பெறவும் ஹக்கன் கோரி இருக்கிறார். ஆனால், செம்ரா மரணம் தொடர்பாக விசாரணை நடந்து வந்ததால் ஹக்கன் மனுவையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இதற்கு மத்தியில், செம்ரா இறந்த சமயத்தில், சோகமாக கூட ஹக்கன் இல்லை என்பதால், செம்ராவின் குடும்பத்தினருக்கும் அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஆரம்பத்தில் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து வந்த ஹக்கன் அய்சல், இதன் பின்னர் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மனைவியின் பெயரில் உள்ள இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காகவே அவரை திட்டம் போட்டு மலை உச்சி பகுதிக்கு ஹக்கன் கொண்டு சென்றதாகவும், பின்னர் அங்கிருந்து அவரை தள்ளி விட்டதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் அங்கே இருந்த சுற்றுலா பயணிகள் சிலர், செம்ராவின் கடைசி தருணத்தில் சில வீடியோக்களையும் எடுத்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கில் தற்போது ஹக்கனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதும் உறுதியாகி உள்ளது. கர்ப்பிணி மனைவியின் பெயரில் உள்ள இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக அவரை திட்டம் போட்டு கொலை செய்த கணவர் தொடர்பான செய்தி, அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.